24 ஜனவரி, 2011

திசை மாறி சென்ற மீனவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை


அம்பாந்தோட்டை யில் இருந்து ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க நவம்பர் 12ம் திகதியன்று சென்ற ஐந்து மீனவர்களை இந்தோனேசிய கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். அவர்களை இலங்கைக்கு பாதுகாப்பாக அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த மீனவர்கள் ஐவரும் நவம்பர் 23 வரை இலங்கையில் உள்ள அவர்களின் முகவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தார்கள். அதன் பிறகு அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட தனால் மீனவர்களின் குடும்பத்தினர் கடற்றொழில் நீர்வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்னவுடனும் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடனும் தொடர்பு கொண்டு அவர்களை கண்டுபிடித்து கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து இவ்விருவரும் இந்தியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் அரசாங்கங்களுடன் தொடர்புகொண்டு இம் மீனவர்களை கண்டு பிடித்து காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

அதையடுத்து இம் மூன்று நாடுகளின் கடற்படையினரும், விமான படையினரும் இலங்கை மீனவர்களை தேடும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

இறுதியில் இந்தோனேசிய கடற்படையினர் இம்மீனவர்களை ஆழ்கடலில் கண்டு பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தனர். தேக ஆரோக்கியமாக இருக்கும் இவ் ஐந்து மீனவர்களும் விரைவில் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட வுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக