திமிங்கிலங்களை பார்வையிடுவதற்கான பயணிகள் கப்பல் சேவை இன்று இலங்கை கடற்படையினரால் ஆரம்பிக்கப்படுகின்றது.
இலங்கையின் கிழக்கு மாகாணமான திருகோணமலை துறைமுகத்தில் உள்ள அஸ்ரப் இறங்கு துறையில் இருந்து இக்கப்பல் தொடங்கிவைக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இப்பயணிகள் கப்பல் 3 தொடக்கம் 6 மணித்தயாலங்கள் சேவையில் ஈடுபடுவதுடன் இது ஒரே நேரத்தில் 100 பயணிகளை ஏற்றக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் இக்கப்பல் ஆனது உள்நாட்டு வெளிநாட்டவர்களுக்காக வாரத்திற்கு 3 நாட்கள் இயங்கும்.
கடந்த ஜனவரி மாதம் காலியில் ஆரம்பிக்கப்பட்ட இக்கப்பல் சேவை தற்பொழுது கிழக்கு மாகாணத்தில் திமிங்கிலங்களை பார்வையிடுவதற்கான காலமான மே மாதத்தில் இருந்து செப்டெம்பர் மாதம் வரை இயங்கும் என தெரியவருகிறது. திருகோணமலையானது சுற்றுலாத்துறை பயணிகளை கவரும் விதமாக அமைந்துள்ள கடலோர பிரதேசமாகும். வட மேற்கு பிரதேசத்தை சேர்ந்த கற்பிட்டி, அழுத்கம, அம்பலாங்கொட மற்றும் ஹிக்கடுவ என்பனவும் இலங்கையில் உள்ள ஏனைய கடலோர பிரதேசங்களாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக