6 ஜூன், 2011

புலிகள் அன்று கேட்டதை இன்று பலர் எம்மிடம் கேட்கின்றனர்: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ



புலிகள் அன்று எம்மிடம் கேட்டதை இன்று பலர் எம்மிடம் கேட்க முயற்சிக்கின்றனர். அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை வழங்கத் தயாரில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

கொக்காவில் தொலைத்தொடர்புக் கோபுரத்தை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

"வடக்கிலுள்ள இளைஞர்களை தெற்கிலுள்ளவர்கள் சந்தேகத்தில் நோக்கிய காலம் இருந்தது. சுமார் 25 வருடங்களுக்கு அதிகமாக இந்த நிலை காணப்பட்டது. எனினும் தற்போது அந்நிலை மாறியிருக்கிறது. நாம் மாற்றியமைத்துள்ளோம். வடக்கிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எமது நோக்கமாகும்.

அதனை நிறைவேற்றுவதற்கு பல வழிகளிலும் நாம் ஈடுபட்டு வருகிறோம். புலிகள் அன்று எம்மிடம் கேட்டதை இன்று பலர் எம்மிடம் கேட்க முயற்சிக்கின்றனர். அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை வழங்கத் தயாரில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக