13 டிசம்பர், 2010

வறக்காப்பொலவில் மேலும் நான்கு கொள்ளையர்கள் பலி காட்டுப்பகுதிகளில் இராணுவம், பொலிஸ் தேடுதல்

வறக்காபொல நகைக் கடை கொள்ளையுடன் தொடர்புடைய மேலும் நால்வர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளனர்.

அம்மேபுஸ்ஸ காட்டுப் பகுதியில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்ட சந்தேக நபர்கள் கொள்ளையிட்டதாக கூறப்படும் நகைகள் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களை காண்பிக்க அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேக நபர்கள் பொலிஸார் மீது துப்பாக்கி சூடு நடத்த முற்பட்ட வேளையிலேயே பொலிஸார் நடத்திய பதில் துப் பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டுள் ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை மடக்கிப் பிடிக்கும் பொருட்டு காட்டுப் பகுதியில் பொலிஸாரும், இராணுவத்தினரும் தொடர்ந்தும் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தி வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பொலிஸ் மற்றும் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் ஆறு கொள்ளையர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வறக்காப்பொலை நகைக்கடையில் புகுந்த கொள்ளையர்கள் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் கொள்ளையர்களை பிடிப்பதாக பொலிஸார் மோட்டார் ரோந்து நடவடிக்கை யின் மூலம் பொலிஸார் கொள்ளையர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

இதன் போது கொள்ளையர்கள் நடத்திய துப் பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட் கொல்லப்பட்டதுடன் மேலும் இரு பொலிஸார் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வறக்காப்பொல பொலிஸா ரும், இராணுவமும் தொடர்ந்தும் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக