28 நவம்பர், 2010

அதிகாரப் பகிர்வு அரசியல் தீர்வுக்கான சூழலை ஏற்படுத்தும்




யாழ். இந்திய துணைத்தூதரகத்தை திறந்து வைத்து கிருஷ்ணா உரை

13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அமைந்த அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுப் பொதி ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கான சூழ்நிலையை ஏற்படுத்துமென நம்புவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தியத்துணைத் தூதரகத்தை நேற்றுத் திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அனைத்து சமூகங் களையும் உள்ளடக்கி இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பிக் கப்படும் எனக் கருதுகிறோம் என்றார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர்,

இது மாத்திரமன்றி இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணம் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பிலும் நாங்கள் அக்கறை செலுத்தியுள்ளோம்.

முன்னர் மோதல் பகுதியாகவிருந்த இவ்விடத்தில் சமாதானம் தோன்றியுள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல்லாண்டு காலமாகக் காணப்படும் தொடர்புகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கே இரண்டு நாடுகளும் முன்னுரிமை அளிக்கின்றன.

மடு - தலை மன்னார் மற்றும் ஓமந்தை - பளை புகையிரதப் பாதைகளை அமைக்கும் பணிகளும் சமகாலத்தில் ஆரம்ப மாகும். இந்தப் பிராந்தியம் அமைதிக்கும் இயல்பு நிலைக்கும் திரும்பும்போது இரு நாடுகளுக்கு இடையேயான பழைய தொடர்புகளை மீண்டும் தொடர்வதற்கு முன்னுரிமையளிக்க வேண்டியது இரு நாடுகளினதும் கடப்பாடாகும். இதைக் கருத்தில் கொண்டு கொழும்பு - தூத்துக்குடி மற்றும் தலை மன்னார் - இராமேஸ்வரம் கப்பல் சேவைகளைத் திரும்பவும் ஆரம்பிப்பதற்கு வேண்டிய புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றிற்கான பேச்சு வார்த்தைகளைச் சமீபத்தில் நிறை வேற்றியுள்ளோம்.

தலை மன்னாரிலுள்ள பழைய கப்பல் துறையும் மீளமைக்கப்படும். காங்கேசன் துறைத் துறைமுகப் புனரமைப்பு மற்றும் மீள் நிர்மாணப் பணிகளை நாம் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளோம்.

இது யாழ்ப்பாண வாணிபத்தின் மைய மாக மீண்டும் உயிர்பெறும். கலிமர் முனை யானது காங்கேசன்துறையிலிருந்து 40 கடல் மைல் தூரத்திலேயே உள்ளது.

பலாலி விமான நிலையத்தை மீண்டும் அபிவிருத்தி செய்து இந்தியாவுக்கு மிடையேயும் மற்றும் உள்நாட்டு விமான சேவைகளுக்கும் பொருத்தமானதாக இலங்கை அரசாங்கம் அபிவிருத்தி செய்யுமென நம்புகிறோம்.

எதிர்வரும் வருடங்களில் இத்தகைய பல்தரப்புத் தொடர்புகள் மக்களுக்கும் மக்களுக்குமிடையேயான தொடர்புகளை மட்டுமன்றி இரு நாடுகளின் உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கும் ஒரு செயலூக் கத்தை அளிக்குமென நாம் நம்புகின்றோம்.

கடந்த மாதங்களில் தங்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப் பட்ட மக்களுக்கு அவர்கள் தற்காலிகத் தங்கு மிடங்களை அமைத்துக் கொள்ளும் பொருட்டு கூரைத்தகடுகள் சீமெந்து போன்ற வற்றையும் சிறிய அளவில் அவர்கள் தோட்ட வேலைகளை ஆரம் பிக்கும் பொருட்டு விவசாய உபகர ணங்களையும் வழங்கினோம்.

நாங்கள் தற்போது வடமாகாணத்தின் புனருத்தாரணம் மற்றும் மீள்நிர்மாணப் பணிகளில் ஈடுபடுவதன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்குத் துணையாக வுள்ளோம்.

யாழ்ப்பாணத்தின் கலாசார எழுச்சிக்குப் புத்தூக்கமளிக்கும் முகமாக இந்திய உத வித் தூதரக அலுவலகம் யாழ்ப்பாணத்தில் ஒரு கலாசார நிலையத்தை அமைப்பதற்கும் துரையப்பா விளையாட்டரங்கைச் செப்ப னிடுவதற்கும் வேண்டிய உதவிகளை வழங்கும்.

மன்னாரிலுள்ள திருக்கேதீஸ்வரம் ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்யும் பணியையும் இந்தியா ஏற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரக அலுவலகத்தைத் திறப்பதற்கான சகல ஒத்தாசைகளையும் வழங்கிய அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளு கிறேன்.

அவர்களுடைய ஒத்துழைப்பும் உதவி களும் மேலும் தொடருமென எதிர்பார்க் கின்றேன். இத்தகைய அபிவிருத்தியானது எதிர்காலத்தில் இரு நாடுகளுக்குமான உறவுகளை மேலும் மேலோங்கச் செய்யு மென்பதில் எனக்குச் சந்தேகமில்லை என்று தெரிவித்தார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணம் சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, யாழ். மாவட்ட விவசாய அமைப்புகளுக்கு 300 உழவு இயந்திரங்களை கையளித்தார்.

இந்நிகழ்வு யாழ். பொது நூலகத்திற்கு முன்னால் நடைபெற்றது.

அதன் பின்னர் பலாலி வீதியில் அமைக் கப்பட்டுள்ள இந்தியத் துணைத் தூதரகத் தையும் திறந்து வைத்தார். அங்கிருந்து அரியாலை சென்ற அவர் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்பட விருக்கும் 50,000 வீட்டுத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக 1000 வீடுகளை அமைக்கும் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

கீரிமலை, நகுலேஸ்வரம் கோவிலுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் விஜயம் செய்திருந்தார்.

மதவாச்சிக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான புகையிரதப் பாதைகளை அமைக்கும் பணியை அங்குரார்ப்பணம் செய்வதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் யாழ்ப்பாணத்திலிருந்து மதவாச்சி புறப்பட்டுச் சென்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக