3 செப்டம்பர், 2010

மக்களின் இறைமையை வலுப்படுத்துவதற்கே அரசியலமைப்புத் திருத்தம் சு.க.மாநாட்டில் ஜனாதிபதி






எனது பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ளுவதற்காக அரசியல் யாப்பு திருத்தத்தை முன்வைக்கவில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகள் வகித்த காரணத்திற்காக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை இந்த யாப்பு திருத்தத்தில் நீக்கப்படுவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இந்தக் கட்டுப்பாட்டை நீக்கினாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அபேட்சகரை கட்சி தான் தெரிவு செய்யும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிகரமான 59வது வருடாந்த தேசிய மாநாடு அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகள் வகித்த ஒருவரை மீண்டும் அப்பதவிக்கு தெரிவு செய்வதா? இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் இத்திருத்தத்தின் ஊடாக மக்களிடம் அளிக்கப்படுகின்றது. நாம் மக்கள் மயமான அரசியல் யாப்பு திருத்தத்தையே முன்வைக்கவிருக்கின்றோம். இதனூடாக ஆறு வருட பதவிக் காலத்தை 12 வருடங்களாக நீடிக்கும் நோக்கம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மக்கள் விரும்புபவர் தான் ஜனாதிபதியாகத் தெரிவாவார்.

தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பின் கீழ் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற முடியாது என அரசியலமைப்பு விமர்சகர்கள் கூறினர். ஆனால் நாம் அதனை முடியும் என நிரூபித்துள்ளோம். சூரியனும், சந்திரனும் இருக்கும் வரையும் இந்த யாப்பு இருக்க வேண்டியதில்லை. நாட்டு மக்களின் தேவைக்கு ஏற்ப அது திருத்தப் படவேண்டும். அபிவிருத்தியும், தேசிய சமத்துவமும் மாறவேண்டும். மக்களின் இறையாண்மையை வலுப்படுத்தக்கூடிய வகையில் அரசி யல் யாப்பு மாற வேண்டும்.

இந்த அரசியல் யாப்பின் ஊடாக மக்களின் விருப்பு, வெறுப்புக்களை நிறைவேற்ற முடியாவிட்டால் தேவையான பலத்தை பெற்று வலு வான அரசை அமைத்து அதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன் னெடுப்பது எமது பொறுப்பு என் பதை நினைவூட்ட விரும்புகின் றேன்.

நாம் இப்போது அரசியலமைப்பு திருத்தத்தை மக்கள் முன்வைத்திருக் கின்றோம். அது மக்கள் மயமான அரசியல் யாப்பு. இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதையும், அபிவிருத்தி செய்வதையும் நோக் காக கொண்டு தான் இந்த யாப்பு திருத்தம் முன்வைக்கப்பட்டிருக் கிறதே தவிர எனது பதவிக்காலத்தை நீடித்துக்கொள்ளுவதற்காக அல்ல. அப்படி நினைப்பது தவறு. இத் திருத்தம் ஜனாதிபதி பதவிக்கால த்தை நீடிக்கக் கூடியதல்ல.

தற்போதைய அரசியல் யாப்பின் 9 ஆவது ஷரத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்ற வர்களின் பட்டியல் உள்ளது. அதில் மன நோயாளர்கள், லஞ்சம் பெற்ற வர்கள், வங்குரோத்து காரர்கள் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். மக்களின் வாக்கு மூலம் இருமுறை ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்ய ப்பட்டவர்களும் அப்பட்டியலில் இவர்களுடன் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அரசியலமைப்பு சபை பாராளு மன்றத்திற்கு வெளியே இருக்கி ன்றது. இதற்கு மாற்றமாக பாரா ளுமன்ற சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் மூவரையும் இன அடிப்படையில் தமிழர் சார்பாக ஒருவரும், முஸ்லிம் சார்பாக ஒருவரும் இச்சபைக்கு நியமிக்கப்படுவர்.

மக்கள் பாராளுமன்றத்திற்கு அதி காரத்தை வழங்கும் படியும், அதுவே உயரிய இடம் என்கின்ற னர். அதனையே நாம் செய்கின் றோம். அதனால் மக்களுக்கு உண் மைகளை தெளிவுபடுத்த வேண்டி யுள்ளது.

நாம் நாட்டை ஐக்கியப்படுத்தியுள் ளோம். இனி நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்ல வேண்டி யுள்ளது.

இதற்கு ஸ்ரீல. சு. கட்சி வலுவான பங்களிப்பை அளிக்கவேண்டும். அதனையே நாம் எதிர்பார்க்கின் றோம்.

நாம் இப்போது இலங்கையில் வலுவான அரசியல் கட்சியாக இருக்கின்றோம். அதற்காக சிறிய அரசியல் கட்சிகளை குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதை நான் சொல்லி வைக்கின்றேன். எம்மால் தனியே அரசியல் செய்ய முடியாது. எமக்கு எப்போதும் இடதுசாரிக் கட்சிகள் பக்கபலமாக இருந்தன. எமது தனித்துவத்தையும், அந்தக் கட்சிகளின் தனித்துவத்தையும் பேணிக் கொண்டு நாட்டுக்காக வேலை செய்ய எமக்கு சந்தர்ப்பம் கிடைக்கப்பெற வேண்டும்.

அத னால் நாம் எல்லாக் கட்சி களுடனும் சக வாழ்வுடன் செயற் பட கூடிய வர்களாக இருக்கவேண் டும்.

இன்று ஸ்ரீல. சு. கட்சி இந்நாட்டில் வாழுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்று சேரக்கூடிய தேசியக் கட்சியாக மாறியுள்ளது.

இப்போது தமிழ், முஸ்லிம் தலைவர்கள் எமது கட்சியில் உரு வாகி வருகின்றார்கள். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் எமது கட்சி யாழ்ப் பாண தமிழரை பிரதிநிதித்துவப்படு த்துவதற்காக மிகவும் சிரமப்பட்டிரு க்கின்றது.

இன்று அந்த நிலைமை இல்லை. எல்லா இனத்தவரும், எல்லா கட்சியிலிருந்தும் எமது கட்சியோடு இணையவேண்டும். புதிய இளமை முகம் கட்சிக்கு வரவேண்டும். அப் போது தான் கட்சி நவீனமான முறையில் வலுவாக முன்னேறும் என்றார்.

இம்மாநாட்டில் பிரதமர் டி.எம். ஜயரட்ண, அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், எம்.பி.க்கள், மாகாண ஆளுநர்கள், முதலமை ச்சர்கள், உறுப்பினர்கள், உள்ளூரா ட்சி மன்ற தலைவர்கள், உறுப்பி னர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக