3 செப்டம்பர், 2010

சம்பிரதாய யோசனைகளைத் தவிர்த்து அபிவிருத்தியை பூர்த்தி செய்யும் பட்ஜட் ஜனாதிபதி அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல்

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் 2011 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்துக்கான உத்தேச மதிப்பீட்டு ஆலோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சகல அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

சம்பிரதாய வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும்; அதனை நடைமுறைப்படுத்தும் கட்டமைப்பிலிருந்து விலகி, 2011ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட யோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மூன்று தசாப்த கால யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் ஆசியாவின் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்து வரும் நாடாக இலங்கையை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனவே, நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேடமாக பொருளாதார உட்கட்டமைப்பு வளங்கள் மற்றும் கைத்தொழில்துறை அபிவிருத்தி உள்ளிட்ட சகல செயற்றிட்டங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் அடுத்த நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டைச் செய்யும் பொழுது விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி திறைசேரிக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இதன்படி, திறைசேரி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து தமது அமைச்சுகளின் உத்தேச மதிப்பீட்டை முன்வைக்குமாறு சகல அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொடுக்குமாறு அமைச்சர்களுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளைத் துரிதமாகப் பூர்த்தி செய்யும் வகையில் 2011 ஆம் ஆண் டில் முன்னுரிமை அளித்துச் செயற்படும் வகையில் ஜனாதிபதி முன்வைத்த பிரேர ணையை அமைச்சரவை அண்மையில் அங்கீகரித்தது.

அடுத்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இம்மாதம் இறுதி யில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவு ள்ளது. அதற்கேற்றவாறு அதனைத் தயாரித்து நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி மேலும் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் திணை க்களம் குறிப்பிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக