5 ஆகஸ்ட், 2010

கே.பியும் ஏனைய போராளிகளும் சமமாகவே நடத்தப்பட வேண்டும் - தயாசிறி ஜெயசேகர

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனும் ஏனைய போராளிகளும் சமமாகவே நடத்தப்பட வேண்டும் எனவும் இவர்கள் விடயத்தில் சட்டம் ஒரே மாதிரி செயற்பட வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அவசர காலச் சட்டம் குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

குமரன் பத்மநாதன் விடுதலை செய்யப்படுவாராக இருந்தால் ஏனைய பதினொராயிரம் போராளிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் இந்த விடயத்தில் அரசாங்கம் பாரபட்சமாக செயற்படக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

குமரன் பத்மநாதனை வவுனியாவில் உள்ள வங்கி ஒன்றில் வங்கிக் கணக்கொன்றை ஆரம்பித்து பணம் சேகரிப்பதற்கு அனுமதித்துள்ள அரசாங்கம் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனையவர்களை பார்வையிடுவதற்குக் கூட கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக