டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகளைக் கட்டுப்படுத்துவதற்கு பி. ரி. ஐ. பக்ஹரியாவை இறக்குமதி செய்வது தொடர்பாக ஆராயவென நியமிக்கப்பட்டி ருக்கும் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை நாளை மறுதினம் புதன்கிழமைக்குள் கையளிக்கப்படவிருக்கின்றது.
இந்த அறிக்கை சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்படுமென குழு வின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை கேள்வி மனுக்கோரல் சபைக்கு அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, பி.ரி.ஐ. பக்ஹரியாவை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சின் அதிகாரியொருவர் நேற்று தெரிவித்தார்.
டெங்கு நுளம்பு ஒழிப்பு பணியைத் துரிதப்படுத்துவதற்காக பி.ரி.ஐ. பக்ஹரியாவை உடனடியாக இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
டெங்கு ஒழிப்புக்கு பி.ரி.ஐ. பக்ஹரியாவை பயன்படுத்துவது தொடர்பாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சரவைக்கு சமர்ப்பித்த யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இவ்வருடம் டெங்கு ஒழிப்புக்கென அரசாங்கம் ஐநூறு (500) மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இதில் 80 மில்லியன் ரூபா பி.ரி.ஐ. பக்ஹரியாவை இறக்குமதி செய்வதற்குப் பயன்படுத்தப் படவிருக்கின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக