7 மார்ச், 2010

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கையர் ஒருவர் நாடு கடத்தல்







அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கையர் ஒருவர் நாடு கடத்தப்பட்டமை தொடர்பில் அந்நாட்டு மருத்துவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். 69 வயதான எட்வர்ட் ஜோசப் எனும் இலங்கையரே கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

92 வயதான அவரது தாயாரை கவனித்துக் கொள்வதற்கு ஜோசப்பிற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என அவுஸ்திரேலியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எட்வர்ட் ஜோசப் புகலிடம் கோரி விண்ணப்பித்த பல கோரிக்கைகளை அவுஸ்திரேலிய குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் நிராகரித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் தங்கியிருப் பதற்கு ஜோசப்பிற்கு எவ்வித சட்ட அந்தஸ்தும் கிடையாது என அந்நாட்டு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இதன்படி, ஜோசப் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெவிக்கப்படுகிறது.

எனினும், நோயுற்றிருக்கும் 92 வயதான அயன் ஜோசப் என்ற அவரது தாயாரை கவனித்துக் கொள்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திடீரென தனது மகனது கவனிப்பை இழந்தால் அயன் ஜோசப் உடல் மற்றும் உளநிலை பாதிக்கப்படக் கூடுமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மனிதாபிமான அடிப்படையில் ஜோசப்பிற்கு புகலிடம் வழங்கியிருக்க வேண்டுமென அவுஸ்திரேலிய மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 1996 ஆம் ஆண்டு முதல் எட்வர்ட் ஜோசப் புகலிடம் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும், ஜோசப்பின் ஏனைய பிள்ளைகள் அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதாகவும், அவர்களினால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும எனவும் அவுஸ்திரேலிய அரசாங்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக