24 ஜனவரி, 2010


தேர்தல் கடமைகளில் ஈடுவோர்க்காக விசேட ரயில் சேவைகளை நடத்த ஏற்பாடு-




தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளின் வசதிகருதி விசேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள பொலீஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஏனைய உத்தியோகத்தர்களின் போக்குவரத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே வணிக அத்தியட்சகர் விஜே சமரசிங்க தெரிவித்துள்ளார். அந்தந்த நிறுவனங்களின் வேண்டுகோளுக்கமைய விசேட ரயில் சேவைகளை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளதாக ரயில்வே வணிக அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை தேர்தலில் வாக்களிப்பதற்காக தத்தமது வீடுகளுக்கு திரும்புவோரின் வசதிகருதி இந்த விசேட ரயில் சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாளைதினத்தை விடுமுறையாகக் கருதாது வார நாட்களுக்கான ரயில்சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழ்மொழியை அமுலாக்க பல்வேறு நடவடிக்கை-

சகல அரசாங்க நிறுவனங்களும் தமிழ்மொழியை அமுலாக்குவதற்கு சாத்தியமான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு அரச கருமமொழிகளைச் செயற்படுத்துவதற்குள்ள குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றை நிவர்த்திக்கவும் ஆவன செய்யப்படவுள்ளதாக அரசியல் விவகார தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் திருமதி எம்.எஸ்.விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சகல அரச நிறுவனங்களிலும் அரச கருமமொழிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் அலுவலர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கான பொறுப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார். அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக பொறுப்புக்களைக் கையளிப்பது தொடர்பாக சகல அமைச்சுக்களினதும் செயலாளர்களுக்கும் மாகாணசபைகளின் தலைமைச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உள்ளுராட்சி நிறுவனத் தலைவர்கள், மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுச் செயலாளர்களுக்கு சுற்றுநிருபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக