யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத குழுவினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு அரசாங்கமே காரணம் என ஜனநாயக தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி சற்று முன்னர் தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
'முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை சந்திக்கச் சென்ற வேளையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த சீருடை அணிந்தோரே எம்மைத் தாக்கினர். யாழ்ப்பாணத்தில் உள்ள சோதனைச் சாவடிகளையும் தாண்டி எம்மை தாக்கியுள்ளனர்" என்றார்.
ஜனநாயக தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹந்துன்நெத்தி உள்ளிட்ட குழுவினர் மீது யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத குழுவினர் நேற்று தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் ஜே.வி.பி தலைமையகத்திலும் பிற்பகல் 4 மணியளவில் புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாலும் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக ஜே.வி.பி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக