இத்திட்டம் தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் முன்வைத்த பரிந்துரைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கிராம மற்றும் சிறு நகர அபிவிருத்திக்கான மேற்படி திட்டம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அடுத்த மூன்று வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த திட்டத்துக்கு மொத்தம் 86 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச அபிவிருத்தி அமைப்பும் 34 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கமும் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை சமூக பங்களிப்புமாக அமைகின்றன.
சர்வதேச அபிவிருத்தி அமைப்புடன் இது தொடர் பான கடன் ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படவு ள்ளது. இதேவேளை, அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மற்றொரு யோசனையின் பேரில் காலி மத்திய பஸ் நிலையத்தையும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும் வசதிகளை மேம்படுத்துவதற்கு 278 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்வைத்த மற்றொரு யோசனையின் பேரில் பேராதனை பூங்காவில் பார்வையாளர்களு க்கான வசதிகளை மேம்படுத்தவும் அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
படை வீரர் சீருடை
நாட்டின் பாதுகாப்பு படையினருக்கு (இராணுவம், கடற் படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு மற்றும் தேசிய மாணவர் படை) தேவைப்படும் துணி வகைகள் எதிர்காலத்தில் உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும். அதற்காக 1686 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி முன்வைத்த மேற்படி பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான உள்ளூர் துணி வகைகளை ஒதுக்கீடு செய்யும் கமிட்டியின் மூலம் தேசிய துணிகள் உற்பத்தியாளர்களிடம் இருந்து அவை பெறப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக