சீன ராணுவம் நவீன மயமாக்கப்பட்டு வருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் லியான் குவாங்லீ தெரிவித்தார்.
÷உலகின் மிகப்பெரிய ராணுவமான சீன ராணுவத்தின் 83-வது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
ராணுவத்தை நவீனப்படுத்துவதோடு, சைபர் போர் மற்றும் பிராந்திய அளவிலான சண்டைகளை திறம்பட எதிர்கொள்வது எனவும் விழாவில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
÷சீனாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் லியான் குவாங்லீ விழாவில் பங்கேற்று பேசியதாவது:
÷சீன ராணுவம் விரைவாக வளர்ச்சியடைந்துள்ளது. உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனாவில்தான் ராணுவத்துக்கு அதிகமாக செலவிடப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்கு ராணுவம் தயாராக உள்ளது.
÷நாட்டின் பாதுகாப்பை முக்கியமாகக் கருதி ராணுவம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தைவான், திபெத் ஆகியவை சீனாவுடன் இணைந்த பகுதிகள் என்பதால் இதில் சீனா அதிக ஆர்வம் காட்டி வருகிறது. பாகிஸ்தான் மற்றும் வடகொரியாவுடன் முக்கிய விஷயங்களை சீன ராணுவம் பகிர்ந்து வருகிறது.
÷ராணுவம் நவீனப்படுத்தப்பட்டு வருவதோடு, ராணுவத்துக்காக ஏராளமான கட்டடங்களும் கட்டப்பட்டு வருகின்றன. பிராந்திய அளவிலான சண்டைகளை எதிர்கொள்ளும் வகையில் ராணுவத்தின் பலம் மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.
÷பயங்கரவாத மிரட்டல்களில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 20-ம் நூற்றாண்டின் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள சைபர் போருக்கு சீன ராணுவம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சைபர் மிரட்டல்களில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக புதிதாக சைபர் படை ஒன்றையும் சீனா உருவாக்கியுள்ளது.
சீன அரசு பாதுகாப்புத் துறைக்கு இந்தாண்டு 7.5 சதவீதம் நிதியை ஒதுக்கியுள்ளது. கடந்த ஆண்டு 14.9 சதவீதம் நிதியை ஒதுக்கியது. இது இந்தியாவைப் போல் இரண்டு மடங்கு அதிக அதிகம் ஆகும் என சீன ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
÷கடந்த 10 ஆண்டுகளில் சீன ராணுவம் பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ராணுவத்தில் 2.3 மில்லியன் வீரர்களும், கப்பல் படையில் 2 லட்சத்து 55 ஆயிரம் பேரும், விமானப் படையில் 4 லட்சம் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக