இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேம்ரூன் சமீபத்தில் இந்திய பயணத்தின் போது பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஆதரித்தால் அந்நாடு சர்வதேச சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். இதற்கு பாகிஸ்தானில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
சர்தாரியின் இங்கிலாந்து பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது. ஐ.எஸ்.ஐ. தலைவர் இங்கிலாந்து பயணத்தை ரத்து செய்தார். மேலும்டேவிட் கேம்ரூன் மன்னிப்பு கேட்க வேண்டும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசு பாகிஸ்தானுக்கான இங்கிலாந்து நாட்டுதூதரை வரவழைத்துவிளக்கம் கேட்டது. இந்நிலையில் டேவிட் கேம்ரூன் தனது கருத்தில் உள்ளதாகவும் தனது கருத்தை வாபஸ் பெற மாட்டார் என்றும் இங்கிலாந்து நாட்டு பிரதமர் அலுவலக அதிகாரி கூறியுள்ளார். அவர் டேவிட் கேம்ரூனின் கருத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களையே கூறியதாகவும் அந்நாட்டு அரசை அல்ல என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக