2 ஆகஸ்ட், 2010

புனர்வாழ்வுப்பணிகளைப் பார்வையிட இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி இவ்வாரம் வருகை

இந்திய அரசின் அனுசரணையுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடபகுதிமக்களுக்கான புனர்வாழ்வுப்பணிகளைப் பார்வையிடுவதற்காக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் இவ்வாரம் இலங்கை வரவுள்ளார்.

இலங்கைவரும்அவர் பலாலி விமானத்தளம் ,காங்கேசன்துறை துறை முகம் ஆகியவற்றின் சீரமைப்பு பணிகள் தொடர்பில் நேரில் சென்று ஆய்வுநடத்துவார்.என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை மத்திய உள்துறை அமைச்சர் பி. சிதம்பரம்நேற்று கோபாலபுரத்தில் அமைந்துள்ள முதலமைச்சர் குருணாநிதியின் இல்லத்துக்குச் சென்று அவரைநேரில் சந்தித்ததுடன் மேற்படி இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பிலும் எடுத்துக்கூறினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் உரையாடிய பி. சிதம்பரம் , இலங்தைத்தமிழர்களின் புனர்வாழ்வுப்பணிகள் தொடர்பில் முதல்வருடன் உரையாடியதாகவும் , இவற்றைப் பார்வையிடும் பொருட்டு வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் இவ்வாரம் இலங்கை செல்லவுள்ளதாகவும் கூறினார்.

முதலமைச்சர் மு. கருணாநிதி அண்øமயில் இந்தியப் பிரதமர் மன்÷ காகன் சிங்குக்கு அனுப்பி வைத்த கடிதம் ஒன்றில் வடபகுதி மக்களின் மீள் நிர்மானப்பணிகள் தொடர்பில் ஆராய்ந்து அறியும் வகையில்,இந்திய சிறப்புதூதுவர் ஓருவரை அனுப்பி வைக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.

இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் இணக்கம் தெரிவித்திருந்ததுடன் விரைவில் அனுப்பிவைக்கப்படுவார் என்றும் உறுதி அளித்திருந்தார். இதன் அடிப்படையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் இலங்கை வரவுள்ளதாகத் தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக