பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அமெரிக்கா அந்நாட்டிற்கு 10 மில்லியன் டாலர் வழங்க முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானில் பெய்து வரும் கன மழை மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்துக்கு 1300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலர் வீடுகளை இழந்துள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பராக் ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் மக்களுக்கு உதவும் வகையில் 10 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் மீட்பு பணியில் ஈடுபட ஹெலிகாப்டர், படகுகள், மொபைல்போன்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றம் உணவு பொருட்கள் ஆகியவை விரைந்து வழங்கப்படும் என்றும், பாகிஸ்தான் மக்கள் அமெரிக்காவின் நண்பர்கள் என்றும் கூறியுள்ளார்.
வெள்ளத்தால் தங்கள் உறவினர்களை இழந்தவர்களுக்கும், சொத்துகளை இழந்தவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்வதாகவும், பாகிஸ்தான் அரசுடன் அங்குள்ள அமெரிக்க தூதரகம் இணைந்து செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக