7 ஏப்ரல், 2010

துருக்கியில் ராணுவப் புரட்சிக்கு முயற்சி: ​​19 அதிகாரிகள் கைது

: துருக்கியில் ராணுவப் புரட்சி மூலம் நாட்டைக் கைப்பற்ற சதி திட்டம் தீட்டிய அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

​ துருக்கியில் 1960-ம் ஆண்டில் இருந்து இதுவரை 4 தடவை ராணுவம் புரட்சியின் மூலம் நாட்டைக் கைப்பற்றியுள்ளது.​ தற்போது 5-வது தடவையாக புரட்சி மூலம் நாட்டைக் கைப்பற்ற ராணுவ அதிகாரிகள் சிலர் திட்டம் தீட்டியுள்ளனர்.​ இவர்களுக்கு உடந்தையாக சில ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளும் இருந்துள்ளனர்.

​ ராணுவ அதிகாரிகளின் இந்த சதி திட்டம் குறித்து அரசுக்கு தெரியவரவே,​​ அதிரடி நடவடிக்கையில் இறங்கி ராணுவ அதிகாரிகளின் சதி திட்டத்தை முறியடித்தது.

​ அரசுக்கு கிடைத்த தகவலை அடுத்து இதுபோன்ற அதிகாரிகளை கண்டறிந்து உடனே கைது செய்யுமாறு போலீஸýக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.​ இதையடுத்து நாட்டில் உள்ள 14 முக்கிய நகரங்களில் போலீஸ் ரகசிய விசாரணை நடத்தி சதி திட்டம் தீட்டிய ராணுவ அதிகாரிகளை கைது செய்தனர்.

​ அரசுக்கு எதிராக சதி திட்டம் தீட்டிய 19 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.​

ஆனால் சந்தேகத்தின் பேரில் 95-க்கும் ​ மேற்பட்டோரை போலீஸக்ஷ்ர் கைது செய்துள்ளதாக அந்நாட்டு நீதித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரம் குறைப்பால் விரக்தி:​​ துருக்கியில் ஒருகாலத்தில் அரசியலில் ராணுவத்தின் செல்வாக்கு மேலோங்கி இருந்தது.​ இதற்கு பிரதமர் தயீப் எர்டோகன் ஆட்சிக்கு வந்ததும் முடிவு கட்ட விரும்பினார்.​ ராணுவத்தின் அதிகாரத்தை குறைத்தல்,​​ குற்றம் செய்யும் ராணுவ அதிகாரிகளை சிவில் நீதிமன்றங்களில் விசாரித்தல் உள்ளிட்ட ராணுவ துறைக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்தார்.

​ இதை ராணுவ அதிகாரிகள் சிலர் விரும்பவில்லை.​ ராணுவப் புரட்சி மூலம் தயீப் எர்டோகனை ஆட்சிப் பீடத்தில் இருந்து தூக்கியெறிந்துவிட்டு நாட்டை கைப்பற்ற முடிவெடுத்தனர்.​ அதற்கான சதி திட்டத்தை துரிதமாக தீட்டிவந்தனர்.​ ஆனால் அரசின் அதிரடி நடவடிக்கையால் அவர்கள் சதி திட்டம் முறியடிக்கப்பட்டது.​

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக