26 மார்ச், 2010

ஜோன்ஸ்டன், இந்திக பாராளுமன்றம் வர முடியும்





கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றம் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்காக மீண்டும் கூட்டப்படும் போது, அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இந்திக பண்டாரநாயக்க ஆகியோர் பாராளுமன்றத்திற்கு சமுகமளிக்க முடியும் என்பது அரசின் நிலைப்பாடு. வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளது என்பதை அரசு ஏற்றுக்கொள்ள வில்லை என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கலைக்கப்பட்ட பாராளுமன்ற த்தை மீண்டும் இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்துக்கு மட்டுமே கூட்ட முடியும் எனினும் கலைக்கப்பட்டுள்ள பாராளும ன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் 225 பேரைக் கொண்ட உறுப்பினர்களில் மாற்றம் ஏற்படப் போவதில்லை.

இதேவேளை, அரசியல மைப்பின் படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அமைச்சுப் பொறுப்புக்களில் மாற்றம் ஏற்பட மாட்டாது என அமைச்சரவைக்கு சட்ட மா அதிபர் திணைக்களம் விளக்கம் அறிவித்துள்ளது என்றும் அவர் தெரி வித்தார்.

அவ்வாறெனின் எதிர்வரும் 6ம் திகதி அவசரகாலச்சட்டத்தை நீடிப்பதற்காக சபை கூடும் போது மேற்படி அமைச்சர்கள் வரமுடியுமா? என செய்தியாளர் ஒருவர் கேட்ட போது முடியும் என அவர் பதி லளித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக