26 மார்ச், 2010

செயல்திறன் மிக்கவர்களுக்கே ஐ. ம. சு. மு. அரசில் உரிய இடம்




விருப்பு வாக்குகளுக்காக எவரும் முண்டியடிக்க தேவையில்லை - ஜனாதிபதி
விருப்பு வாக்குக்காக எவரும் முண்டியடிக்கத் தேவை இல்லை. அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்திற்கு வந்தாலும் குறைவான விருப்பு வாக்குகளைப் பெற்றாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன் னணி அரசாங்க த்தில் செயல் திறன் மிக்கவ ர்களுக்கே உரிய இடம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வெலிமடையில் தெரிவித்தார்.

விருப்பு வாக்கு பட்டி யலில் குறை வான வாக்குக ளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினரானாலும் அவர் செயல் திறன்மிக்கவராயின் அவருக்கு அமைச்சுப் பதவியை வழங்கப் பின்நிற்கமாட்டேன் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

பொதுத் தேர்தலின் நிமித்தம் ஐ. ம. சு. மு. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மாவட்ட மட்டத்தில் நடத்தும் பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் வெலிமடை, கெப்பிட்டிபொல மகாவித்தியாலய விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகை யில் :- பதுளை மாவட்ட ஐ. ம. சு. மு. அபேட்சகர்கள் மத்தியில் விருப்பு வாக்குக்கான முண்டியடிப்பு இல்லை என நான் அறிகின்றேன். இதனையிட்டு நான் சந்தோஷப்படுகின்றேன்.

விருப்பு வாக்குக்காக எவரும் முண்டியடிக்கத் தேவையில்லை. ஒருவருக்கு நான்கு வாக்குகள் உள்ளன. முதல் வாக்கை வெற்றிலைச் சின்னத்திற்கு முன்பாக புள்ளியிட்டு அளியுங்கள். இதர மூன்று விருப்பு வாக்குகளையும் பாவித்து உங்களது பாராளுமன்ற பிரதிநிதியைத் தெரிவு செய்யுங்கள்.

விருப்பு வாக்குகளை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் முண்டியடித்து, முரண்பட்டுக்கொள்ளாதீர்கள். விருப்பு வாக்குப் பட்டியலில் அதிகப்படியான விருப்பு வாக்கைப் பெற்று முதலாமிடத்தில் வந்தாலும், குறைவான விருப்பு வாக்குகளைப் பெற்றாலும் ஐ. ம. சு. மு. அரசாங்கத்தில் செயல்திறன் மிக்கவர்க ளுக்கே அமைச்சு பதவிகள் வழங்கப்படும். இதனை ஐ. ம. சு. மு. அபேட்சகர்கள் சகலருக்கும் சொல்லி வைக்க விரும்பு கின்றேன். நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படவிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் கதைத்து, கதைத்து காலம் கடத்தும் பாராளுமன்ற அதிகாரம் எமக்குத் தேவை யற்றது. மாறாக வேலை செய்யக்கூடிய வலுவான பாராளுமன்றமே அமைக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதிலும் வலுப்பெறுவதிலும் தான் எமது இளைய தலைமுறையினரின் எதிர்காலம் தங்கியுள்ளது. அப்போதுதான் இப்போதைய விடவும் நாளைய மக்களின் வாழ்க்கைத் தரமும் மேம்படும். இதனை ஏற்படுத்திக் கொடுப்பது எமது பொறுப்பாகும்.

இதேவேளை, பண்டாரவளைப் பிரதேச மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கிவரும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும். இதற்கென எட்டு (8) பில்லியன் ரூபா செலவிலான வேலைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

நான் ஜனாதிபதி பதவியை ஏற்ற நான்கு வருட காலப் பகுதியில் பய ங்கரவாதத்தை ஒழித்து துண்டாடப்பட்டிருந்த நாட்டை ஐக்கியப்படுத்தினேன். அத்தோடு துரித அபிவிருத்திக்கான ஒளியையும் நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கின்றேன். 2005ம் ஆண்டில் மஹிந்த சிந்தனையில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன். பிளவுபட்டிருந்த நாட்டை ஐக்கியப்படுத்துவதற்காக முதலில் நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்தினேன். தென்பகுதி மக்களை ஓரணியில் திரட்டியிராவிட்டால் வட பகுதியை ஐக்கியப்படுத்தி இருக்க முடியாது.

நாட்டை ஐக்கியப்படுத்துவதற்காக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது எம்மை நல்ல மனிதராகப் பார்த்த சிலர் பின்னர் எம்மை சகோதரர்கள் கம்பனி என விமர்சிக்க தொடங்கினார்கள். என்னைப் பொறுத்தவரை குடும்பம் ஒன்றாக இருக்க வேண்டும். சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். இல்லாவிட்டால் குடும்பமே அழிந்துவிடும். இது எனது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

இப்பிரதேச மக்களின் பிரச்சினைகளை நானறிவேன். அதற்கான பதில் மஹிந்த சிந்தனையின் முன்னோக்கு கொள்கை பிரகடனத்தின் 63ம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை இச்சமயம் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, டிலான் பெரேரா, முன்னாள் பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உட்பட முக்கி யஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக