சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட கப்பலில் உள்ள 20 இலங்கை சிப்பந்திகளும் நல்ல தேகாரோக்கியத்துடன் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு கூறியது.
இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக பிரிட்டன், கென்யா மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களினூடாக சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக அமைச்சு தெரிவித்தது.
எகிப்தில் இருந்து ஈரான் நோக்கிச் சென்று கொண்டிருந்த பிரிட்டனுக்கு சொந்தமான மேற்படி கப்பல் நேற்று முன்தினம் ஓமான் கடலில் வைத்துக் கடத்தப்பட்டது.
கடத்தப்பட்டபோது கப்பலில் இருந்த சிப்பந்தி ஒருவர் இலங்கையிலுள்ள தமது உறவினர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் பிரச்சினையின்றி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இவர்களை விடுவிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக வெளிநாட்டமைச்சு மேலும் கூறியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக