17 ஜனவரி, 2010

அரசியல் தீர்வுக்கு கூட்டமைப்பும் தயாரில்லை

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டு நிற்கின்றது. இதில் எந்த அணி சரியானது என்பதிலும் பார்க்க இவர்கள் தமிழ் மக்களின் சார்பில் பேசுவதற்குத் தார்மீக அடிப்படையில் தகுதி உள்ளவர்களா என்பது பிரதானமான கேள்வி.

பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்று ஒருவேளை இவர்கள் உரிமை கோரலாம். அன்று நடந்ததைத் தேர்தல் என்று கூறுவது மிகப் பெரிய பகிடி. அணியொன்றின் பிரதான வேட்பாளர் தனது வாக்கை அளிப்பதற்கு இயலாதவாறு வன்முறையாளர்களால் தடுக்கப்பட்டார். வாக்களிப்பு நிலையங்களில் புலிகளின் காட்டாட்சியே நடந்தது. இப்படியான தேர்தலில் கிடைத்த வெற்றியை மக்களின் தீர்ப்பு எனக் கூறுவதைப் போன்ற வேடிக்கை வேறெதுவும் இருக்க முடியாது.

எனவேஇ அந்தத் தேர்தல் வெற்றியை ஒருபுறத்தில் தள்ளிவிட்டு இவர்களுடைய செயற்பாட்டின் அடிப்படையிலேயே பார்க்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்ற பின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான எந்த முயற்சியிலும் இவர்கள் ஈடுபடவில்லை. புலிகள் காட்டிய பாதையில் கண்ணை மூடிக்கொண்டு பயணித்தார்கள். இந்தப் பயணத்தின் விளைவாகத் தமிழ் மக்களுக்கு இவர்கள் விளைவித்த தீங்கு கொஞ்ச நஞ்சமல்ல. உடைமை அழிவுகளும் உயிரிழப்புகளும் இடம் பெயர்வுகளும் அகதி வாழ்க்கையும் இவர்களின் பிழையான கொள்கையினால் ஏற்பட்ட விளைவுகள்.

இத்தனைக்கும் தார்மீகப் பொறுப்பேற்று இவர்கள் அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும். ஆனால் மீண்டும் அரசியல் களத்துக்கு வந்திருக்கின்றார்கள். வந்தவர்கள் தமிழ் மக்களின் பிரதான பிரச்சினையான இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான திட்டமொன்றை முன்வைத்துச் செயற்படுவதற்குத் தயாராக முன்வந்திருக்க வேண்டும். ஆனால் இவர்களிடம் தீர்வுத்திட்டம் எதுவும் இல்லை. கொள்கைத் திட்டமொன்றைத் தயாரித்துக் கொண்டிருப்பதாகக் கிட்டத்தட்ட ஒரு வருடமாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இப்போதும் வெறுங்கை தான். தமிழ் மக்களின் பிரதான பிரச்சினையான இனப் பிரச்சினையின் தீர்வுக்கான கொள்கைத் திட்டம் எதுவுமே இல்லாமல் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்குவதாகக் கூறுவதும் தேர்தலில் இம்மக்கள் எப்படி வாக்களிக்க வேண்டுமென வழிகாட்டுவதும் நகைப்புக்கிடமானவை.

சரத் பொன்சேகா கையொப்பமிட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரிடம் கையளித்ததாகப் பத்திரிகைகளில் வெளியாகிய ஆவணத்தில் சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கூட்டமைப்புத் தலைவர்களுக்கும் பொன்சேகாவுக்குமிடையே இடம் பெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாடுகளே அவை. இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றி அந்த ஆவணத்தில் எதுவும் இல்லை. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கம் பொன்சேகாவுக்கு இல்லை என்பதே இதன் அர்த்தம். இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உடன்பாடாக இருப்பது தான் புதுமை.


ஹேலீஸின் முதலாவது காட்சியகம் யாழ்ப்பாணத்தில்

யாழ்ப்பாணத்தில் தனது பல தசாப்தகால பழமையான உறவுக ளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் ஹேலீஸ் குழுமம் ‘ஹேலீஸ் உலகம்’ எனும் தொனிப்பொருளில் அதன் முதலாவது காட்சியகத்தை தொடங்கியுள்ளது.

இலங்கையில் ஒரே கூரையின் கீழ் பல்வேறு உற்பத்திகளையும் சேவைகளையும் வழங்குவதில் முன்னணி வகிக்கும் ஹேலீஸ் அதன் கூட்டாண்மை இலட்சினையின் கீழ் புதிய காட்சியகத்தை டிசம்பர் மாதம் 28ம் திகதி யாழ்ப்பாணத்தில் தொடங்கி வைத்தது. ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள இதேபோன்ற காட்சியகங்கள் பின்னர் கொழும்பிலும் திறந்துவைக்கப்படும் என்று ஹேலீஸ் குழுமம் அறிவித்துள்ளது.

‘ஹேலீஸ் அதன் உற்பத்திகள் மற்றும் சேவைகள் ஊடாக ஒரே இடத்தில் இருந்து பெருந்திரளான மக்களுக்கு தனது குழுமத்தின் பிரதிநித்துவத்தை வழங்குவது என்பது ஹேலீஸ் மேற்கொண்டுள்ள வர்த்தகத்தைப் பொறுத்தமட்டில் பாரிய சவால் மிக்க ஒரு செயலாகும்” என ஹேலீஸ் குழுமத்தின் தலைவர் மொஹான் பண்டிதகே தெரிவித்தார். எவ்வாறாயினும் இந்தப் பணியை மேற்கொள்ளளநாம் கணிசமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். நாட்டில் யுத்தத்திற்குப் பிந்திய மறுசீரமைப்பில் ஹேலீஸின் பங்களிப்பை வழங்கும் வகையில் யாழ்ப்பாணத்தை எமது முதலாவது தெரிவாக நாம் எடுத்துள்ளதோடு வட பகுதியுடனான வரலாற்றுத் தொடர்புகளை மீளக்கட்டியெழு ப்பவும் உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வடபகுதியில் விவசாய சமூகத்தினர் மத்தியில் ஹேலீஸின் பெயர் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். 1960 களின் ஆரம்பம் முதல் குடாநாட்டு விவசாயிகளுக்கு தேவையான விவசாய உள்ணுடுகளையும் ஆலோசனைச் சேவைகளையும் ஹேலீஸ் வழங்கி வருகின்றது. ‘துரதிஸ்டவசமாக எமது குழுமத்தின் பல புதிய உற்பத்திகளும் சேவைகளும் கடந்த 25 வருடங்களாக வட பிராந்தியத்தை சென்றடைய முடியாத நிலை காணப்பட்டது. இயலுமான வரைக்கும் விரைவாக இந்த நிலையை மாற்றியமைக்க நாம் எண்ணியுள்ளோம்” என மொஹான் பண்டிதகே மேலும் தெரிவித்தார்.

இலக்கம் 47 ஸ்டான்லி வீதி யாழ்ப்பாணம் என்ற முகவரியில் அமைந்துள்ள ஹேலீஸ் வர்த்தக காட்சியமான ‘ஹேலீஸ் உலகம்’ சுமார் 2000 சதுர அடி பரப்பளவு கொண்ட இரு மாடிக் கட்டிடமாகும். முதலாவது மாடியில் தும்புப் பொருட்கள் முதல் றப்பர் தரைமெத்தைகள் மற்றும் உறைகள்இ குஷன்கள்இமெத்தைகள்இ வீட்டுப்பாவனைக்கான றப்பர் கையுறைகள்இ காபன் செறிவு கொண்ட முகக் கவசங்கள் வாசனை நீக்கிப் பொருட்கள்இ தனிநபர் ஆரோக்கியப் பொருட்கள் மிக வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பாவனைப் பொருட்கள் மற்றும் கெமராக்கள்இ பலிம்கள்இ விவசாய உள்ணுடுகள்இ பெறுமதிக் கூட்பட்ட விவசாய உற்பத்திகள்இ விவசாய உபகரணங்கள் மற்றும் மின்பிறப்பாக்கிகள் என பல்வேறு உற்பத்திப் பொருட்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த விற்பனைக் கூடத்தின் மூலம் போக்குவரத்துஇ சரக்குச்சேவை என்பன தொடர்பான போக்குவரத்துச் சேவைகள்இ அவைபற்றிய தகவல்கள் என்பனவற்றையும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்
ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல்

நாட்டின் ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர் தலுக்கு இன்னும் ஒன்பது நாட்கள் மாத்திரமே இருக்கின்றன. ஜனநாயக முறையில் தங்கள் தலைவரைத் தெரிவு செய்வத ற்கு மக்கள் தயாராகிவிட்டனர்.

சகல பகுதிகளிலும் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. முக்கிய வேட்பாளர்கள் சூறாவளிப் பிரசாரத்தில் இறங்கியிருக்கின்றனர்.

என்றாலும்இ பணத்தை முதன்மைப்படுத்தி மக்கள் சக்தியைக் கொச்சைப் படுத்தும் செயல்களில் பொன்சேகா தலைமையிலான எதிரணியினர் செயற்பட்டு வருவது அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

ஜனநாயக விழுமியங்களுக்குள் தங்களது கொள்கைகளை முன்வைத்து மக்கள் ஆதரவைப் பெற்று செயற்படுவதே தார்மீகம். நிறைவேற்ற முடி யாத வாக்குறுதிகளை முன்வைப்பதும்இ நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் தலைவர்கள் மீது சேறுபூசும் பிரசாரங்களை முன்வைப் பதும் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. இத்தகைய முயற்சிகளில் தோற் றுப் போன எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மற்றொரு முயற்சியிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

தங்களது பிரசார நடவடிக்கைகளுக்காக கோடிக் கணக்கில் பணம் கொடு த்து முக்கியஸ்தர்களைப் பிடிக்கும் படுமோசமான செயற்பாடுகளில் இறங்கியிருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது.

இந்நாட்டில் பயங்கரவாதம் முற்றாக முறியடிக்கப்பட்டு ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்இ ஜனநாயகத்தை அடியோடு குழிதோண்டிப் புதைக்கும் கைங்கரியத்தில் எதிரணியினர் இறங்கி இரு ப்பது நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் முஹமட் முஸம்மில் என்பவரை பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கக் கூறி 300 இலட்சம் (30 மில்லியன்) ரூபா வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு சபையர் ஹோட் டலில் 205வது அறையில் இந்தப் பணப் பரிமாற்றம் இடம்பெற்றிருக்கி றது. ஜனாதிபதித் தேர்தல் சுயேச்சை வேட்பாளர் மயோன் முஸ்தபா வும்இ அரச தரப்பிலிருந்து பொன்சேகா தரப்புக்குத் தாவிய துஆ கட்சி யின் தலைவர் ஹாபீஸ் நமர் அஹமட்டும் இந்த பரிமாற்றத்தில் ஈடு பட்டுள்ளனர். பத்தறமுல்லையில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் முஹ மட் முஸம்மில் வீடியோ ஆதாரங்களுடன் இதனை வெளிப்படுத்தினார்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தங்கள் பக்கம் இழுப்பதற்கு 300 இலட்சம் ரூபா வழங்கப்படுகிறதென்றால்!? நினைத்துக் கூடப்பார்க்க முடியவில்லை.

இதனை ஒரு சாதாரண விடயமாக எடைபோட்டுவிடமுடியாது. வெளி நாட்டுச் சக்திகளும்இ தேசத்தை அழிக்க முயல்பவர்களும் இதன் பின் னணியில் இருக்கிறார்களென்பது பெரும் தொகைப் பணப்பரிமாற்றத் தின் மூலம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

நாட்டு மக்கள் இது குறித்து மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். இலட்சக் கணக்கான ரூபா ய்கள் வழங்கப்படும்போது வெளிநாட்டு தூதரக அதிகாரியொருவரும் இருந்ததாக முஸம்மில் கூறுகிறார். இதில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்ப டும் தூதரகம் இதனை மறுத்துள்ளது.

என்றாலும்இ நாட்டை அழிக்க முய லும் வெளிநாட்டு சக்திகள் எதிரணியினரின் வடிவத்தில் கால் ஊன்ற முற்படுகிறார்கள் என்பதற்கு நல்லதொரு ஆதாரம் கிடைத்திருக்கிறது.

மக்களின் ஜனநாயகக் குரல்களை நசித்து பணத்தின் மூலம் சகலதையும் நிறைவேற்ற முடியுமென அன்னத்தைச் சின்னமாகக் கொண்டவர்கள் நினைப்பது இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்புடை யதல்ல. ஜனநாயகப் படுகொலைக்கு ஒப்பானதாகவே இதனைக் கொள்ளலாம்.

ஆட்சிக்கு வந்தால் ஊழல் மோசடிகளை ஒழித்து விடுவோமென தேர்தல் வாக்குறுதி


புனர்வாழ்வு முகாம்களிலிருந்த 566 பேர் நேற்று பெற்றோரிடம் ஒப்படைப்பு


படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுள் மேலும் 566 பேர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வவுனியா காமினி மகா வித்தியாலயம்இ பம்பைமடு உட்பட வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு முகாம்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இவர்கள் 566 பேரும்இ வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் அருகே பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

புலிகளினால் பலாத்காரமாக சிறுவர் படையணிக்கு சேர்க்கப்பட்டிருந்த சிறுவர் சிறுமியர்களில் சிலரும்இ புலிகள் இயக்கத்தில் மிகவும் அடி மட்டத்தில் செயலாற்றிக் கொண்டிருந்தவர்களில் சிலருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிலிருந்தும் சுமார் 1000 பேர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர்.

சரணடைந்த முன்னாள் புலி உறுப்பின ர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படும் அரசின் திட்டத்திற்கமைய எதிர்வரும் காலங்களில் மேலும் சிலரும் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

ரூ. 3 கோடி முஸம்மிலுக்கு வழங்கிய விவகாரம்:
பொன்சேகாவின் ஊழலை மறைக்கும் முயற்சி அம்பலம்;
இன்றும் பல திடுக்கிடும் தகவல்கள்

சரத் பொன்சேகாவின் ஆயுத ஊழல் மோசடிகளை மூடிமறைக்க வும்இ அவருக்கு ஆதரவு வழங்குவதற் குமாக மூன்று கோடி ரூபாவை இலஞ்சமாக வழங்கியுள்ள விடயம் பொய்யானது என எவரேனும் தெரி வித்தால் அவை அனைத்தும் ஒலிஃ ஒளி நாடாக்களுடன் நிரூபிக்க முடி யும் என தேசிய சுதந்திர முன்னணி யின் பேச்சாளர் நேற்று தெரிவித் தார்.

தேசிய சுதந்திர முன்னணி பாரா ளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மிலுக்கு மூன்று கோடி ரூபாவை வழங்கிய விடயம் பற்றி மேலும் புதிய தகவல்கள் இன்றைய செய்தியாளர் மாநாட்டிலும் தெரிவி க்கப்படும் என்றும் அந்தப் பேச்சா ளர் மேலும் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவின் ஆயுத ஊழ ல்கள் தொடர்பாக ஜே. என். பி. தலைவர் விமல் வீரவங்ச முன் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் பொய் யானவை என தெரிவிக்க வேண்டும் என்றும் அதேவேளை ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவை வழங்க வேண்டும் என் றும் கூறி மொஹமட் முஸம்மிலு க்கு கட்டுக்கட்டாக பணத்தை வழங் கியுள்ளனர்.

இந்தப் பணக் கொடுக்கல் வாங்க ல்கள்இ நடந்த சம்பாஷணைகள் அடங்கிய ஒலிஃஒளி நாடாக்களையும் ஜே. என். பி. தலைவர் விமல் வீரவங்ச ஊடகங்களுக்கு காண்பித்தார்.

அரசாங்க தரப்பு எம்.பிக்க மூன்று கோடி ரூபா பணத்திற்கு விலை பேசும் தேசத்துரோக செயல்களை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத் தும் நோக்குடன் ஜே. என். பி. தலைவர் விமல் வீரவங்சவின் அறி வுறுத்தலின் படி மொஹமட் முஸ ம்மில் நடவடிக்கையை மேற்கொண் டிருந்தார்.

இதன்படி வெள்ளவத்தை சபயார் ஹோட்டலில் அறையொன்றில் முதலாவதாக 10 இலட்சம் ரூபா முற்பணமாக வழங்கப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவுக்கு முஸம்மி லின் ஆதரவை பெற்றுக்கொள்வத ற்கான இடைத் தரகராக மயோன் முஸ்தபா எம். பியே இருந்துள்ள மையும் அம்பலமாகியுள்ளது.

300 இலட்சம் ரூபா பேரம் பேசப்பட்டு முடிவானதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கஇ மங்கள சமரவீரஇ ரவி கருணாநாயக்கஇ மலிக் சமரவிக்கிரம ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஆயத்தமொன்றையும் மயோன் முஸ்தபா ஏற்பாடு செய்திருக்கிறார்.

இதில் சரத் பொன்சேகாவுடன் பேசு மாறும் ரணில் மற்றும் ரவி கருணா நாயக்க ஆகியோர் முஸம்மிலிடம் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.

வெள்ளவத்தை சபயார் ஹோட்டல் அறையில் முற்பணமாக வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபா வுடன் தொடர்புடைய ஒலிநாடா வும் ஜே. என். பி.யினர் வசமுள் ளது. இந்த ஒலி நாடாவில் மயோன் முஸ்தபா மற்றும் நோர்வே தூதரக அதிகாரி ஒருவரும் இருந்ததாகவும் மொஹமட் முஸம்மில் தெரிவித் தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக