17 ஜனவரி, 2010


புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 566 முன்னாள் போராளிகள் விடுதலை

No Image
அரசாங்கப் பா து காப்புப் படையினரிடம் சரணடைந்துஇ புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களில் 566 போ் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களைஇ அவர்களது உறவினர்கள் மற்றும் பெற்றோரிடம் வவுனியாவில் வைத்து ஒப்படைத்ததாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் தெரிவித்துள்ளார்.

புனருத்தாபன நிலையங்களில் விடுதலைப் புலிகளின் மனநிலை விருத்தி செய்யும் விசேட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை செய்யப்பட்டவர்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது




தாய்லாந்து ஐ.டீ.சி சிறையில் உள்ள இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டம்


தா No Image ய்லாந்து பா ங்கொக் நகரிலுள்ள ஸ்வொன் புளு என்னுமிடத்தில் அமைந்துள்ள தாய்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஐ.டீ.சி சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள யூ.என்.எச்.சீ.ஆர் இலங்கை அகதிகள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளனர்.

பல வருடங்களாக ஐ.டீ.சீ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த யூ.என்.எச்.சீ.ஆர் அகதிகள் மேற்படி ஐ.சீ.சி சிறைச்சாலையிலிருந்து தங்களை விடுதலை செய்யும்படியும் அல்லது வேறொரு அகதிகள் முகாமிற்கு தங்களை மாற்றும்படியும் கோரி மேற்படி உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளனர்.

மேற்படி கைதிகள் ஆண்கள்இ பெண்கள் மற்றும் சிறுவர்கள் என வெவ்வேறாகப் பிரிக்கப்பட்டு குற்றவியல் கைதிகள் போன்று சுமார் மூன்று வருடங்களுக்கும் மேலாக எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற வகையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் விடுதலைக்கான முன்னெடுப்புக்கள் எதுவுமின்றி இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் இவர்கள் தங்களை மிக விரைவில் விடுதலை செய்ய வேண்டும் அல்லது வேறொரு அகதி முகாமிற்கு மாற்றவேண்டும் என்றும் கோரியே மேற்படி உண்ணாவிரத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

இவர்களின் நிலைமைகள் மற்றும் விடுதலை தொடர்பிலும்இ இவர்கள் முன்னெடுக்கவிருக்கும் உண்ணாவிரதம் பற்றியும் மனித உரிமை நிறுவனம்இ தாய்லாந்திலுள்ள யூ.என்.எச்.சீ.ஆர் அலுவலகம்இ ஜெனீவா யூ.என்.எச்.சீ.ஆர் அலுவலகம். சிறுவர் பாதுகாப்புச் சபை போன்ற நிறுவனங்களுக்கு எழுத்து மூலமாகவும்இ மின்னஞ்சல் மூலமாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தும் இதுவரை எந்தவொரு மனித உரிமை நிறுவனமும் அவர்களைச் சென்று பார்வையிட்டு அவர்களின் பிரச்சினைகளை கேட்டறியாத நிலையில்இ 15ஆம் திகதி மாலை 5.00 மணியளவில் தாய்லாந்திலுள்ள மனித உரிமைகள் நிறுவன அதிகாரிகள் சிறையிலுள்ள ஆண்இ பெண்இ சிறுவர்கள் என அகதிகள் அனைவரையும் சென்று பார்வையிட்டு அவர்கள் முன்னெடுக்கவுள்ள உண்ணாவிரதம் சம்பந்தமாக உரையாடியுள்ளனர்.

அவ்வாறு உரையாடியுள்ள போதிலும்இ உண்ணாவிரதத்தை கைவிடுவது பற்றியோ அல்லது உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க வேண்டாமென்றோ தெரிவிக்காத இவர்கள் உண்ணா விரதத்திற்கான காரணங்களை நிவிர்த்திப்பது தொடர்பிலும் எந்தவித அறிவித்தலையோ கருத்துக்களையோ தெரிவிக்காது திரும்பிச் சென்றுள்ளனர்.

இவ்வாறான நிலைமையில் திட்டமிட்டபடி எதிர்வரும் 18.01.2010 அன்று உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்படுமென தாய்லாந்து சிறையிலுள்ள அகதிகள் தெரிவிக்கின்றனர்.

கேணல் ராம் ஒருபோதும் கைது செய்யப்படவில்லை:இராணுவ பேச்சாளர்


தமிழீழ விடுதலை No Image ப்புலிகளின் தளபதிகளில் ஒருவ ரான கேணல் ராம்இ அரசாங்க த்தி னால் விடுவிக்க ப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவின் தரப்பு தெரிவித்திருந்ததை அரச தரப்பு மறுத்துள்ளது.

தடுப்பு காவலில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் ராம் விடுவிக்கப்பட்டுள்ளதாக சரத் பொன்சேகாவின் தரப்பு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் கேணல் ராம் மறைந்திருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தலைமை தாங்கும் நிலை ஏற்படலாம் என தெரிவித்துள்ள அந்த அறிக்கையில்இ இது தேர்தலை மாத்திரமன்றி பொதுமக்களின் வாழ்க்கையையும் சீர்குலைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த அறிக்கை தொடர்பில் கருத்துரைத்துள்ளஇ இலங்கை இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரஇ கேணல் ராம் என்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதியை படையினர் ஒருபோதும் கைதுசெய்திருக்கவில்லை எனக்குறிப்பிட்டுள்ளார். கேணல் ராம் கிழக்கில் மறைந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


ஐ.நா தலைமையகத்தை டுபாய்க்கு மாற்ற நடவடிக்கை

News Photo
2015ஆம் ஆண்டில் ஐக்கியநாடுகள் சபையின் தலைமையகத்தை நியூயார்க்கிலிருந்து டுபாய்க்கு மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஐக்கியநாடுகள் சபைக்கு தலைமையகம் அமைப்பதற்கான இடம் தர தயார் என துபாய் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .ஏற்கனவே இந்த வாய்ப்பு சிங்கப்பூருக்கு இருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் அமெரிக்காவில் செயல்பட அமெரிக்காவுக்கு விருப்பமில்லாத காரணத்தால் அதனை நியூயார்க்கிலிருந்து மாற்றுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் உலக நாடுகளின் தலைமையகமான ஐக்கியநாடுகள் சபைக்கு உலக நாடுகள் அனைத்திற்கும் எளிதில் செல்வதற்கான இடமாக இருக்க வேண்டுமென்பது இதன் முக்கிய நோக்கமாகும்.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு .நா அதிகாரிகளை அழைத்துள்ள டுபாய் அரசு தலைமையகத்தை துபாயில் அமைப்பதால் ஏற்படும் சாதகங்களை குறித்து .நா அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்த தயாரென்றும் கூறியுள்ளது.

பூகோள அமைப்பில் டுபாய்க்கு நிறைய சிறப்புகள் உண்டு. உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் எளிதாக சென்றடையக் கூடிய நகரம்இ உலகத்திலேயே மாநாடு நடத்துவதற்கான இடமாகவும் துபாய் கருதப்படுகிறது. சர்வதேச தரத்திலான அடிப்படை வசதி வாய்ப்புகள் நிறைந்த இடமாகவும் துபாய் கருதப்படுகிறது. கடல்வழிஇ விமான வழிஇ சாலை வழி போக்குவரத்து வாய்ப்புகள் ஐக்கியநாட்டு சபை போன்ற எப்பொழுதும் பரபரப்பாக இயங்கும் அமைப்பிற்கு ஏற்ற இடமாக துபாய் கருத்தில் கொள்ளப்படுகிறது.

உலக சமாதானத்திற்கும்இ பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் .நா நடத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகத்தான் .நா வின் தலைமையகத்தை துபாய்க்கு கொண்டுவருவதற்கான முயற்சி என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சிகள் அதிகமான தொடர் பங்களிப்பை உறுதிச்செய்யும் விதமாக .நா தலைமையகத்தின் இடம் மாற்றம் தங்களுக்கு உதவும் என துபாய் அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் .நா சபை அமெரிக்காவில் இருப்பதால் செலவுகள் அதிகரித்து அது அமெரிக்கா குடிமகன்கள் மீது வரிச்சுமையை ஏற்படுத்துவதாக கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த செய்தி அறிக்கையிலும் ஆப்பிரிக்காஇ ஆசியாஇ ஐரோப்பா நாடுகளில் அதிக வசதிகள் உள்ள துபாய்தான் எதிர்காலத்தில் உலகத்தின் தலைமையகமாக சிறந்தது என்றும் "யுனைட்டட் நேசன்ஸ் சிட்டி" துபாய் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக