13 ஜனவரி, 2010

ஜனாதிபதியின் 2ம் கட்ட ஆட்சியில் நியாயமான அரசியல் தீர்வு கிடைக்கும்-தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது இரண்டாம் கட்ட ஆட்சியின் போது தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வை வழங்குவாரென்று தமிழ் அரசியல் கட்சிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த போன்று ஜனநாயகத்தை முன்னெடுத்து வந்த ஒருவராலேயே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களை ஆறு மாத காலத்தினுள் மீள்குடியமர்த்துவதாகவும், தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுவிடுப்பதாகவும் உறுதியளித்தமைக்கு இணங்க நடவடிக்கைகளை மேற்கொண்ட ஜனாதிபதி, தமிழர்களுக்கு நியாயமானதும், கெளரவமானதுமான தீர்வினை வழங்குவாரென தமிடிழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜனாதிபதி சொன்னதைச் செய்பவர் என்பதை பல்வேறு நடவடிக்கைகளில் நிரூபித்திருக்கிறார். அதேபோல், அடுத்த இரண்டாம் கட்ட ஆட்சியின் போது நியாயமான தீர்வு கிடைக்குமென நம்புவதாக சித்தார்த்தன் தெரிவித்தார். ஜனாதிபதி வெனியிட்டுள்ள தேர்தல் விஞ் ஞாபனமும் இந்த நம்பிக்கையை உறுதிப் படுத்துவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாப னத்தை வரவேற்பதாக பத்மநாபா ஈழமக் கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் ரீ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் முன்மொழியப்பட்டவாறு இரண்டாவது சபையொன்றை ஸ்தாபிப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். எவ்வகையிலேனும் ஏதாவதொரு பொறிமுறையுடன் தீர்வினை நடைமுறைப்படுத்துவதை ஆரம்பிக்க வேண்டும்.

40 வருடகாலம் ஜனநாயக முன் னெடுப்பில் வந்தவர்களிடமே பிரச்சி னைகளைத் தீர்க்குமாறு கோரமுடியும். மே 18 ஆம் திகதியுடன் பயங்கரவாதம் நிறைவுக்கு வந்துவிட்டது. இனிமேல் மக்களின் இயல்பு வாழ்வைத் தோற்றவிக்க வேண்டும். ஜனாதிபதி கூறியதைப்போன்று ஏ- 9 பாதையைத் திறந்துள்ளார்.

யாழ்ப் பாணத்தில் ஊரடங்குச் சட்டம் நீக்கப் பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயத்தில் மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழ், முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தின் பங்பாளர் களாக இணைந்து கொள்ள வேண்டும்.

எதிர்க்கட்சி வேட்பாளர் சிறுபான்மை இனத்தைப் பற்றியோ, தமிழர்களைப் பற்றியோ எந்தவிதமான விடயங்களையும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூற வில்லை. அதேநேரம் அவர் வெளியிட்ட 10 அம்ச விடயங்களைத் தவிர வேறு உடன்பாடு இல்லையென அந்தக் கட்சி யைச் சார்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றுகிறது. அவர்கள் குறிப்பிடுவதைப் போல் எந்தவிதமான நன்மையும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.