13 ஜனவரி, 2010

கூட்டமைப்புடனான (TNA) ஒப்பந்தத்தை வெளிப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

கூட்டமைப்புடனான ஒப்பந்தத்தை வெளிப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தமிழ் தேசிய கூட்டமைப்புடன் செய்து கொண்ட இரகசிய ஒப்பந்தத்தை வெளிப்படுத்துமாறு கோரி கொழும்பில் நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசில் அங்கம் வகிக்கும் பிக்குமாரை பெரும் பாண்மையாக கொண்ட ஜாதிக ஹெல உறுமய ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 க்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் சுமார் ஒன்றரை மணிநேரமாக இடம்பெற்றது.

தமிழீழ விடுதலை புலிகளுக்கு மீண்டும் புத்துயிர் கொடுப்பதற்காக ஜெனரல் சரத் பொன்சேகஇ ஐக்கியதேசியக் கட்சி, ஜே.வி.பி, தமிழத்தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து முயற்சிக்கிறார் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

தமிழ் மக்களின் மிகவும் குறைந்த ஒரு இலட்சம் வாக்குகளை பெற்றுக்கொள்வதற் காகவே சரத்பொன்சேகா இராணுவத்தினர் பெற்ற வெற்றியை காட்டிக்கொடுக்க துணிந்துள்ளார் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

10 ஆயிரத்திற்கும் அதிகமான விடுதலைப் புலிபோராளிகளை விடுவிக்கவேண்டும் என் று தமிழத்தேசிய கூட்டமைப்பு முன்வைத்த கோரிக் கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிரா கரித்தார் ஆதனால் தான் கூட்டமைப்பு ஜெனரல் சரத் பொன்சேகவை ஆதரிப்பதாக அறிவித்தது என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஹெல உறுமயவின் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பல தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக