29 டிசம்பர், 2009

காணாமற் போனோரை கொண்டுவந்து விடுவதாகக் கூறி பலலட்சம் ரூபாய் மோசடி-
யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து காணாமற்போனவர்களது உறவினர்களிடமிருந்து 8லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட பண மோசடியொன்று இன்றுகாலை இடம்பெற்றுள்ளது. காணாமற் போனவர்களின் வீடுகளுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒருவர் காணாமற்போனோரை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து, குறித்த தொகைப் பணத்துடன் யாழ். சிறைச்சாலைக்கு முன்பாக வருமாறும், அவ்விடத்தில் வைத்து காணாமற் போனவர்கள் விடுவிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற தொலைபேசி அழைப்புகள் ஐந்திற்கும் மேற்பட்ட காணாமற் போனவர்களின் உறவினர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொலைபேசியின் பணிப்புரைக்கமைய குறித்த இடத்திற்கு சென்றபோது அவர்களிடமிருந்து பணத்தைச் சேகரித்த ஒருவர் விரைவில் காணாமற்போனவர்களை அவ்விடத்திற்கு கொண்டுவருவதாக தெரிவித்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார். குறித்தநபர் சுமார் 8லட்சத்து 75ஆயிரம் ரூபாய் பணத்தை அபகரித்துச் சென்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக