முதல் முயற்சி தோற்று விட்டது: அமெரிக்க விமானங்களை தகர்க்க மீண்டும் முயற்சிப்போம்;
நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இளைஞர் உமர் பாரூக் அப்துல் முதலாப் (வயது23). இவன் லண்டனில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தான்.
இவன் கடந்த வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆலந்து நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு நார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றான். அந்த விமானம் டெட்ராய்ட் விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது உமர்பாரூக் அப்துல் தான் மறைத்து எடுத்து வந்திருந்த ரகசிய திரவப் பொருட்கள் மற்றும் பவுடரை கலந்து வெடி மருந்தாக்கிஇ அந்த விமானத்தை தகர்க்க சதி செய்தான்.
அவன் வெடிமருந்து கலவையை உருவாக்கிக் கொண்டிருந்தபோதுஇ விபரீதத்தை அறிந்த சக பயணிகள் அவரை மடக்கிப் பிடித்தனர். இதனால் அவனது பயங்கர சதி திட்டம் முறியடிக்கப்பட்டது. 300 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
டெட்ராய்ட் விமான நிலையத்தில் அந்த விமானம் தரை இறங்கியதும்இ உமர் பாரூக் அப்துல் கைது செய்யப்பட்டான். வெடிமருந்து கலவை தயாரித்த போதுஇ அது வெடித்ததால் உமர்பாரூக் அப்துல் காயம் அடைந்திருந்தான். மிக்சிகன் மருத்துவமனையில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பிறகு உமர் பாரூக் அப்துல் சிறையில் அடைக்கப்பட்டான். அமெரிக்காவில் எந்த நகரில் அவன் சிறை வைக்கப்பட்டுள்ளான் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே உமர் பாரூக்அப்துலின் குடும்பம் மற்றும் பின்னணி குறித்த எல்லா தகவல்களையும் அமெரிக்க போலீசார் திரட்டி வருகிறார்கள்.
முதல்கட்ட விசாரணையில் உமர்பாரூக் அப்துல் அல்- கொய்தா இயக்கத்துடன் தொர்புடையவன் என்று தெரிய வந்துள்ளது. ஏமன் நாட்டில் உள்ள அல்கொய்தாவின் கிளை ஒன்று உமர்பாரூக்குக்கு நவீன பயிற்சிகளை கொடுத்துள்ளது. பிறகு வெடிமருந்து பவுடரை கொடுத்து அவனை விமானத்தில் தீவிரவாதிகள் அனுப்பி உள்ளனர்.
அப்துல் வைத்திருந்த வெடி மருந்து பவுடரை அரேபிய பகுதி அல்கொய்தா தீவிரவாதிகள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த சதி திட்டத்தின் பின்னணியில் உள்ள அனைவரையும் பிடிக்க ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் அன்று விமானத்தை தகர்க்க முயற்சி செய்தது நாங்கள்தான் என்று அல்கொய்தாவின் அரேபியன் பிரிவு பொறுப்பு ஏற்றுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு இஸ்லாமிய இணையத்தளம் ஒன்றில் தகவல் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டி ருப்பதாவது:-
அமெரிக்க விமானத்தை நூதன முறையில் தகர்க்க முயற்சி செய்தது நாங்கள்தான். ஏமன் நாட்டில் எங்கள் குழுக்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத் தியது. அதற்கு பழிக்கு பழி வாங்கவே நாங்கள் இந்த தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டோம்.
எங்களது முயற்சி எதிர்பாராதவிதமாக தோல்வி அடைந்துவிட்டது. தாக்குதல் தியாக செயலுக்காக நைஜீரியா வாலிபரிடம் அதிநவீன தொழில்நுட்ப கருவியை கொடுத்து அனுப்பி இருந்தோம்.
உயர் தொழில்நுட்பத்தில் தயாரான அந்த கருவி சேர்க்கையில் கடைசி நிமிடத்தில் கோளாறு ஏற்பட்டு விட்டது. இதனால்தான் அது வெடிக்காமல் போய் விட்டது.
அமெரிக்கா நடத்திய குண்டு வீச்சில் எங்கள் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்து விட்டனர். அமெரிக்கர்களே உங்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறோம். எங்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொன்று குவித்தவர்களுக்குத்தான் நீங்கள் ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் மீது நாங்கள் எந்த முன் எச்சரிக்கையும் கொடுக்காமல் தாக்குதல் நடத்துவோம். பழிக்கு பழி வாங்குவது நெருங்கி விட்டது. எனவே அமெரிக்கர்களே இனி இது போன்ற தாக்குதல்களை நீங்கள் நிறைய எதிர்பார்க்கலாம்.
உலகில் உள்ள எல்லா முஸ்லிம்களையும் நாங்கள் அழைக்கிறோம். எதிரிகளை கொல்லுங்கள். அரேபியா பகுதிகளை அமெரிக்க படைகள் அதர்மமாக ஆக்கிரமித்து இருப்பதை கண்டித்து நைஜீரியா வாலிபர் தியாகம் செய்துள்ளார்.
அமெரிக்க உளவுத் துறையின் திறமையையும் பலத்த பாதுகாப்பையும் மீறி அவர் வெடி பொருட்களுடன் ஊடுருவி சாதனை படைத்துள்ளார்.
இவ்வாறு அந்த இணையத்தள தகவலில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக