விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி
வாஷிங்டன்: பூமியைப் போலவே நீர் நிறைந்த, அதைவிட 2.7 மடங்கு பெரிய Ôசூப்பர் பூமிÕ கிரகத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹார்வேர்டு பல்கலைக்கழக வானியல் பேராசிரியர்கள் நடத்திய ஆராய்ச்சியில் பூமிக்கு அருகே அதைவிட 2.7 மடங்கு பெரிதாக மற்றொரு கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
புதிய கிரகத்தில் தண்ணீர், வெப்பம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். புதிய கிரகத்துக்கு ஜிஜே 1214பி என்று பெயரிட்டனர். எனினும், பூமியை விட 2.7 மடங்கு பெரியதாக அது இருப்பதால், Ôசூப்பர் பூமிÕ என்று அழைக்கின்றனர். இதுபற்றி பேராசிரியர் சர்போனியூ கூறுகையில், ÔÔநமது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு இயற்கை புதிய கிரகங்களை உருவாக்கி உள¢ளது.
நமது பூமிக்கு அருகில¢ புதிய கிரகம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. செயற்கைக் கோளுடன் இணைந்த அதிநவீன தொலைநோக்கியில் கிரகங்களை தேடுவோம். இந்த கிரகத்தை சாதாரண 16 அங்குல தொலைநோக்கியை வைத்தே காண முடிகிறதுÕÕ என்றார். இதுபோன்ற புதிய கிரகங்கள் இருப்பதை கடந்த சில ஆண்டுகளில்தான் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கத் தொடங்கினர்.
இதற்கு முன் தெரிய வந்த சில கிரகங்கள் ஜுபிடர் போன்ற அமைப்பில் இருந்தன. Ôசூப்பர் எர்த்Õ கிரகம்தான் பூமியைப் போல உள்ளது என்றும் சார்போனியூ தெரிவித்தார். எனினும், புதிய கிரகத்தில் உயிரினங்கள் வசிக்கத் தேவையான நீர் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியிருந்தாலும், ஆக்சிஜன் இருப்பதாக குறிப்பிடப்படவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக