18 டிசம்பர், 2009

ஏ-9 வீதியூடாக இன்று முதல் சகல வாகனங்களும் பயணிக்கலாம் : யாழ். அரச அதிபர்


No Image

ஏ-9 வீதியினூடாக இன்று முதல் தனியார் மற்றும் சகல வாகனங்களும் கட்டுப்பாடுகள் இன்றிப் பயணிக்க முடியும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி தனக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில், "யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கும் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ஏ-9 பாதையில் இன்று 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் எதுவித கட்டுப்பாடுகளும் இன்றிப் பயணிக்க முடியும். காலை 6.00 மணி முதல் மாலை 4.00மணி வரை இவ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களுக்குமிடையிலும் இந்த அடிப்படையில் போக்குவரத்துக்களை மேற்கொள்ள முடியும். யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும் சகல பஸ்களும் யாழ்.மத்திய பஸ் நிலையத்திலிருந்து தொடரணி இல்லாமல் ஏ-9 வீதியினூடாக பயணிக்க முடியும். தேவைக்கேற்ப இடையிடையே இராணுவச் சோதனை நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படலாம்.

யாழ்ப்பாணத்திலிருந்து பொருட்களைக் கொண்டு செல்லுதல் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு பொருட்களை கொண்டு செல்லுதல் போன்ற செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரும் வரை நடைமுறையில் உள்ளவாறே நாவற்குழி களஞ்சியத்திலிருந்து தொடரணி மூலம் பயணிக்கலாம்.

பயணத்தை மேற்கொள்ளும் சகல வாகனங்களும், சாரதி, நடத்துனர்கள், பயணிகள் யாவரும் இச்செயற்பாட்டில் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்





பாகிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதல் : 12 கிளர்ச்சியாளர்கள் கொலை

No Image


பாகிஸ்தானின் வட மேற்கே நடைபெற்ற இரு வேறு அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்களில் தலிபான் கிளர்ச்சியாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் 12 நபர்கள் கொல்லப்பட்டு விட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் நடத்தப்பட்ட கடைசி ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். முன்னதாக உள்ளூர் பழங்குடியினத்தவரின் வீடுகள் மீது ஆளின்றி பறக்கும் விமானம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்.

கடந்த சில மாதங்களில் இப்பகுதியில் இது போன்று ஆளில்லா விமானங்களின் மூலம் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதல் : 12 கிளர்ச்சியாளர்கள் கொலை பாகிஸ்தானின் வட மேற்கே நடைபெற்ற இரு வேறு அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்களில் தலிபான் கிளர்ச்சியாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் 12 நபர்கள் கொல்லப்பட்டு விட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் நடத்தப்பட்ட கடைசி ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

முன்னதாக உள்ளூர் பழங்குடியினத்தவரின் வீடுகள் மீது ஆளின்றி பறக்கும் விமானம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்.

கடந்த சில மாதங்களில் இப்பகுதியில் இது போன்று ஆளில்லா விமானங்களின் மூலம் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன






ஜிஎஸ்பி பிளஸ் சலுகைத் திட்டம் இடைநிறுத்தம் : ஐரோப்பிய ஒன்றியம்

No Image


இலங்கைக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் வழங்குவது தொடர்பிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை இலங்கை மீறியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கைக்கு சலுகைத் திட்டத்தை வழங்குவது குறித்த இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு உறுப்பு நாடுகளுக்கு இரண்டுமாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சலுகைத் திட்டத்தை நீடிப்பதற்கு தேவையான முக்கிய நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்துள்ளதா என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் கிறிஸ்டியன் ஹோமான் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இலங்கை சர்வதேச மனித உரிமைச் சட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதா என்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய சில நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்யத் தவறியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இலங்கைக்கான சலுகைத் திட்ட நீடிப்பை இரண்டு மாத காலத்திற்கு இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கையுடன் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க ஐரோப்பிய ஒன்றியம் விரும்புவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது



நெருக்கடியான கா லத்தை நான் கடந்து விட்டேன் -வேட்பாளர் மஹிந்த தெரிவிப்பு
No Image


நெருக்கடியான காலகட்டத்தை நான் கடந்து விட்டேன். அடுத்து என் முன்னால் இருப்பது அபிவிருத்திக்கான வேலைத் திட்டமாகும் என்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தேர்தல்கள் செயலகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு வெளியேறுகையில் செயலகத்திற்கு வெளியே குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள், ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் புடைசூழ்ந்திருந்த நிலையில் அவர் மேலும் கூறுகையில், மிக நெருக்கடியான காலக்கட்டத்தை கடந்து விட்டேன் அடுத்து என்முன்னாள் இருப்பது அபிவிருத்திக்கான வேலைத்திட்டமேயாகும் என்றார்.




பயங்கரவாதத்தை வென்றவன் ஜனநாயகத்தையும் வெல்வேன் -வேட்பாளர் பொன்சேகா தெரிவிப்பு


வரலாற்றில் நான் பயங்கரவாதத்தை வென்றவன் மக்கள் என்னை சுற்றியிருப்பதனால் ஜனநாயகத்தையும் வெற்றிகொள்வேன். என்று எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

தேர்தல்கள் செயலகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு வெளியேறுகையில் செயலகத்திற்கு வெளியே குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு மத்தியிலிருந்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறுகையில், மக்கள் என் பின்னால் திரண்டிருக்கின்றனர். பயங்கரவாத்தை தோல்வியடையச் செய்த நான் ஜனாநாயகத்தையும் வெற்றிக்கொள்வேன். அதன் மூலமாக நாட்டில் இடம்பெறுகின்ற ஊழல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போன். மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைத்து நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழும் வகையில் நல்லாட்சியை ஏற்படுத்துவேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக