7 டிசம்பர், 2009

மூவின மக்களும் எவ்வித பேதமுமின்றி ஜனாதிபதி மஹிந்தவை ஆதரிப்பார்கள்-அரசாங்கம் நம்பிக்கை


வடக்கு, கிழக்கு உட்பட முழு நாட்டையும் அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்களின் ஆணையை கோரிநிற்கின்றார். ஜனாதிபதி தேர்தலில் அவரை அனைத்து மக்களும் ஆதரிப்பார்கள் என்று மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை முடிவுக்குக்கொண்டு வந்த ஜனாதிபதி தற்போது நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக மக்களின் ஆணையை கோரி நிற்கின்றார்.

எனவே ஜனாதிபதிக்கு இந்த நாட்டின் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் உட்பட அனைத்து மக்களும் எந்தவிதமான பேதமும் இன்றி ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எமது அரசாங்கத்தின் மீது பாரிய நம்பிக்கையை வைத்துள்ளனர். அøனத்து இன மக்களுக்கும் சம உரிமைகளை வழங்கவேண்டும் என்றும் அவற்றை உறுதிபடுத்தவேண்டும் என்பதும் எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுவருகின்றனர். யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அம்மக்கள் மிக விரைவாக மீள்குடியேற்றப்படுகின்றனர். அத்துடன் முகாம்களில் உள்ள மக்களுக்கு சுதந்திர நடமாட்டத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வடக்கு கிழக்குப் பகுதியை அபிவிருத்தி செய்வதிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மிகவும் அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. முழு நாட்டையும் அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை மேற்கொண்டுள்ளோம். இதேவேளை தேசிய நல்லிணக்க வேலைத்திட்டத்தை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது அனைத்து மக்களும் நம்பிக்கை வைத்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக