ஸ்ரீ.சு.கட்சியில் இணைகிறார் எஸ்.பி. தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் மத்திய அக்கட்சியின் மத்திய மாகாண அமைச்சருமான எஸ்.பி;. திசாநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவதாகவுமு; ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதாகவும் சற்று முன்னர் அறிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியில் தான் வகித்துவந்த அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவு குறித்த கருத்துகளை இதுவரை வெளியிடாமல் இருந்த திசாநாயக்க இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் எஸ்.பி. திசாநாக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது ஈ.பி.டி.பி,யின் நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதா?- ஜே.வி.பி. கேள்வி; தெளிவுபடுத்துமாறும் கோரிக்கை இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியினை அரசாங்கம் தற்போதுதானாகவே முன் வந்து ஏற்றுக்கொண்டுள்ளது. எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானவரல்லர். பல்வேறு நோக்கங்களைக் கொண்ட அரசியல் கட்சிகளின் தற்போதைய பிரச்சினையாகவும், நாட்டுக்கு சவாலாகவும் காணப்படும் நிறைவேற்று அதிகார முறைமையை ஒழித்தல் மற்றும் ஜனநாயகத்தை ஸ்தாபித்தல், நல்லாட்சியை ஏற்படுத்தல் போன்ற காரணிகளுக்காக எதிரணிக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. எதிரணியின் பொது வேட்பாளர், பதவிக்கு வந்தவுடன் 17ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுøறப்படுதி சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பார். பின்பு பாராளுமன்றத்தைக் கலைத்து, பொதுத்தேர்தல் ஒன்றுக்குச் செல்வார். இந்த தேர்தலில் குறிப்பாக அரச ஊடகங்கள் பக்கச் சார்பற்ற முறையில் செயற்படும். பொலிஸாரும் அவ்வாறே செயற்படுவர். இதன் பின்னர் ஆட்சிக்கு வரும் அரசாங்கமே நாட்டைக்கொண்டு நடத்துவதோடு, நிறைவேற்று அதிகாரம் இல்லாத ஜனாதிபதியாக எதிரணியின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா பதவி வகிப்பார். எதிரணியின் வெற்றியை தாங்கிக்கொள்ள முடியாத அரசாங்கம் பொய்ப் பிரசாரங்களைச் செய்துவருகின்றது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்று கூறும் அரசாங்கத்தில் கூட்டணியமைத்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் ஜாதிக ஹெல உறுமயவிற்கும் இடையில் கொள்கை ரீதியாக ஒற்றுமை உள்ளதா? ஈ.பி.டி.பி. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பத்து நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனை ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அந்த பத்து நிபந்தனைகளில் முதலாவதாக 13ஆவது திருத்தச் சட்டத்தில் ஆரம்பித்து அதற்கு அப்பால் சென்று தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். பத்தாவதாக தமிழர்களின் பூர்வீக பிரதேசங்களில் சுயாட்சிக் கொள்கையை ஏற்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதா என்பதனை நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். ஜனாதிபதிப் பதவி மீதுள்ள பேராசையினால் தேசிய பாதுகாப்பு, இன ஒற்றுøம, இறையாண்மை போன்றவற்றுக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றது ஸ்.பி.யுடன் ஜனாதிபதி மஹிந்த சந்திப்பு ஒன்றரை மணி நேரம் விரிவான பேச்சு ஹங்குராங்கெத்தையிலுள்ள எஸ்.பி. திஸாநாயக்வின் வீட்டிற்கு நேற்று திடீரென ஹெலிகொப்டரில் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவருடன் ஒன்றரை மணி நேரம் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பேச்சுவார்த்தையையடுத்து ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரிப்பதற்கான முடிவினை எஸ்.பி. திஸாநாயக்க எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. இந்த முடிவு குறித்து இன்று கொழும்பில் செய்தியாளர் மாநாடு ஒன்று நடத்தி எஸ்.பி. திஸாநாயக்க அறிவிப்பாரென அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பௌத்த விகாரை வைபவமொன்றில் கலந்துகொள்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு சென்றுள்ளார். இதன்போது எஸ்.பி. திஸநாயக்கவின் ஹங்குராங்கெத்திதையிலுள்ள வீட்டுக்கு அவர் சென்றுள்ளார். அங்கு இருவருக்குமிடையில் விரிவான பேச்சுவார்த்øத் இடம்பெற்றுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது சில கோரிக்கைகளை எஸ்.பி. திஸநாயக்க ஜனாதிபதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முன்வைத்துள்ளார். இதற்கு ஜனாதிபதியும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் முடிவினை எஸ்,பி. திஸாநாயக்க எடுத்ததாக கூறப்படுகின்றது. இன்று காலை கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் எஸ்.பி. திஸநாயக்க செய்தியாளர் மாநாடு ஒன்றினை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு பின்னர் சபை நடவடிக்கை இடைநிறுத்தம் | |||
பாராளுமன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் ஒருமாதத்திற்கு தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை இறுதி தீர்மானம் எட்டப்படும் என்றும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பாராளுமன்ற நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி, திகதி குறிப்பிடப்பட்டதன் பின்னர் பாராளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு கூடவிருக்கின்றது. அன்று அவசரகாலத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதம் நடத்தப்படும். அவசரகாலச்சட்டத்தை நீடித்துக்கொண்டதன் பின்னர் ஜனவரி இரண்டாம் வாரம் வரையில் பாராளுமன்ற நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பில் இன்று நடைபெறுகின்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்திலேயே இறுதி தீர்மானத்தை எட்டுவதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற நடவடிக்கைகளை ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரையிலும் தற்காலிகமாக இடைநிறுத்திவைப்பதற்கு அரசாங்கம் கலந்தாலோசித்த போதிலும் அவசரகாலச்சட்டத்தை நீடித்துக்கொள்ளவேண்டியிருப்பதனால் அடுத்தமாதம் வரையிலும் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற பிரதான இரு வேட்பாளர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதை அடுத்து ஆளும் எதிர்க்கட்சிகள் தங்களது பிரசார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற, மாகாண, பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒருமாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதம் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்திற்கு பின்னர் ஆரம்பித்து மாலை 3.30 மணிவரை நடைபெறும். அதற்கு பின் போக்குவரத்து அமைச்சுக்கு 475 கோடிரூபாவை ஒதுக்கிக்கொள்வதற்கும், விவசாய அபிவிருத்தி அமைச்சுக்கு 5 கோடி ரூபாவை ஒதுக்கிக்கொள்வதற்குமான குறைநிரப்பு பிரேரணைகள் மீதான விவாதம் மாலை 4.30 மணிவரை நடைபெறும் |
7 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக