26 அக்டோபர், 2009

மட்டக்களப்பில் விதாதா வள நிலையங்களை திறக்க அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண உத்தரவு
ராஜரட்னத்துக்கு இலங்கையில் ரூ.525 கோடி அளவில் சொத்து


மிகப் பெரிய பங்கு மோசடியில் ஈடுபட்டவருக்கு இலங்கையில் ரூ.525 கோடி அளவுக்கு சொத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் மத்திய வங்கி கவர்னர் அஜித் என்.கெப்ரால் இதைத் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளதாகக் கருதப்படும் தமிழர் மறுசீரமைப்பு அமைப்புடன் ராஜரத்தினத்துக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் விதாதா வள நிலையங்கள் இதுவரை திறக்கப்படாத பிரதேச செயலகப் பிரிவுகளில் அவற்றை உடனடியாக திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

நேற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அமைச்சர் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டமொன்றில் தனது அமைச்சின் மாவட்ட செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆராய்ந்த போது இந்த பணிப்புரையை விடுத்தார்.

ஏற்கனவே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் சில பிரதேசங்கள் இருந்தமையினால் விதாதா வள நிலையங்களின் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியாத நிலை அப் பிரதேஙசங்களில் இருந்தமை குறித்து அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து கொக்கட்டிச்சோலை, வாகரை, வெல்லாவெளி, கிரான், செங்கலடி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் இவற்றை ஆரம்பிப்பதற்கான பணிப்புரை அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டதோடு அதற்கான நியமனங்களைச் செய்வதற்கான உத்தரவும் அமைச்சரினால் பிறப்பிக்கப்பட்டது.

இதன் பின்னர் அமைச்சர் ஓட்டமாவடி பிரதேசத்திற்கு விஜயம் செய்து விதாதா வள நிலையம் ஒன்றுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.இந்நிகழ்வுகளில் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எஸ்.எச்.அமீர் அலியும் கலந்துகொண்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக