22 ஆகஸ்ட், 2009

தலிபான் தீவிரவாதிகளை அழிக்க பாகிஸ்தான் வீரர்களுக்கு இலங்கை ராணுவ பயிற்சி

கொழும்பு, ஆக. 22-

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். அவர்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக தொடர்ந்து தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களை அடக்கி ஒடுக்குவதிலும் பாகிஸ்தான் ராணுவம் தீவிரமாக உள்ளது. இருந்தும் அவர்களை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. கொரில்லா தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் ராணுவத்துக்கு எதிராக விடுதலைப் புலிகள் இதுபோன்ற அதிரடி தாக்குதல்களை நடத்தி வந்தனர். ஆனால் இலங்கை ராணுவம் அமெரிக்கா, இந்தியா, வங்காளதேசம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ராணுவத்திடம் கொரில்லா தாக்குதல் பயிற்சி பெற்று அவர்களிடம் வெற்றிகண்டது.

இதேபோன்ற பயிற்சியை பெற்று தலிபான் தீவிரவாதிகளை அழிக்க பாகிஸ்தான் முடிவு செய்தது. அதற்காக தனது ராணுவ வீரர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

தற்போது பாகிஸ்தான் வீரர்களுக்கு இலங்கை ராணுவம் பயிற்சி அளித்து வருகிறது. இந்தபயிற்சி 6 வாரங்கள் நடைபெறுகிறது. இந்ததகவலை புதிதாக பொறுப்பேற்றுள்ள ராணுவ தளபதி ஜகத்ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக