August 22, 2009

வீட்டில் அடைத்து வைத்து மாணவியை கற்பழித்த கல்லூரி முதல்வர்; கருச்சிதைவால் பலியான பரிதாபம்


ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் மர்கேடு பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் முதல்வராக இருப்பவர் குமார். இவர் ஏழை மாணவிகளுக்கு படிக்க நிதி உதவி செய்து அவர்களை தன்வசப்படுத்துவார். பின்னர் வெளி இடங்களுக்கு அழைத்துச்சென்று உல்லாசமாக இருப்பார். இதே போல் அவர் முதலாம் ஆண்டு படித்து வந்த ரமாதேவிக்கு நிறைய பண உதவி செய்தார். பின்னர் மர்கேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அவளை பூட்டி வைத்து கற்பழித்தார்.
இதில் ரமாதேவி கர்ப்பம் அடைந்தார். அதன் பிறகும் உல்லாசம் அனுபவித்ததால் ரமாதேவிக்கு கருக்கலைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவளை பத்ராச்சலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விஜயவாடா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரமாதேவி இறந்து போனார்.
இதுபற்றி மர்கேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கல்லூரி முதல்வர் குமாரை தேடி வருகிறார்கள்.
மாணவி ரமாதேவியின் சாவுக்கு காரணமான குமாரை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர்.

0 Kommentare:

Post a Comment