16 டிசம்பர், 2009

ஜனாதிபதி தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடக்க வேண்டும்




இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலும் அதை அடுத்து நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலும் சுதந்திரமாகவும்இ முறைகேடுகள் இல்லாமலும் நம்பகத்தன்மையுடனும் நடக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும் டேவிட் மிலிபாண்ட் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான ஒரு நடவடிக்கைதான் அனைத்து சமூகத்தின் நம்பிக்கையையும் பெற்று நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் எதிர்காலத்தில் தங்களுக்கும் ஒரு பங்கு உள்ளது என்று கருதுபவர்கள் அனைவரும்இ அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய ஒரு அரசியல் தீர்வு முன்வைக்கபடுவதற்கு பங்காளிகளாக இருந்து உடன்பட வேண்டியது மிகவும் அவசியமானது என்றும் டேவிட் மிலிபாண்ட் தெரிவித்துள்ளார்.

அங்கு உள்நாட்டு மோதல் ஏன் ஏற்பட்டது என்பதனை அனைவரும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டியதும் தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் ஐரோப்பிய ஆணையம் எழுப்பியுள்ள கவலைகள் குறித்து இலங்கை அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் அந்நாட்டிடம் தொடர்ந்து தெரிவித்து வருவதாகவும் டேவிட் மிலிபாண்ட் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக