4 அக்டோபர், 2009

அன்பார்ந்த நோர்வே வாழ் தமிழ் மக்களே சிந்தித்து செயற்படுங்கள்-புளொட் நோர்வே கிளை!




எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டமானது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏகபிரதிநித்துவ, மந்தைத் தத்துவத்தினால் இன்று எமது தாயக மண்ணில் ஏற்படுத்தியுள்ள அவலநிலை என்ன என்பதை சற்று சிந்திப்போம். பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின், குழந்தைகளின், அப்பாவி மக்களின், சொந்தங்கள் சுற்றத்தினரின் உயிர்களை காவுகொண்ட இந்த திசை தவறிய ஆயுதப்போராட்டம் பல கோடி சொத்தழிவையும், என்றும் எம் இனத்தின் பெருமைக்குரிய அழியாச் செல்வமாகவும் அடையாளமுமாக இருந்த கல்வி வளத்தையும் சிதைத்து சின்னாபின்னமாக்கி முட்கம்பி வேலிகளுக்குள் உணவுக்காக கையேந்தும் ஒரு இழிநிலையில் எமது இனத்தை கொண்டுபோய் விட்டிருக்கிறது என்பதை இப்போதாவது விளங்கிக் கொள்வோம்.

புலிகளின் போராட்டமானது ஆயிரக்கணக்கான மக்களை பலிகொண்டு முள்ளிவாய்க்காலில் முடிந்து எஞ்சியோரை செட்டிகுளத்தில் அகதிகளாக கொண்டுவந்து நிறுத்தி விட்டிருக்கிறது. எனவே, இந்த மக்கள் இனியாவது சுதந்திரமாகவும், ஜனநாயகத்துடனும் வாழ வேண்டும். இவர்களை இன்னுமொரு மாயைக்குள்ளும், கனவுகளுக்குள்ளும் தள்ளிவிடுவதற்கு எத்தனிக்கும் எந்த அரசியல் தலைமைத்துவத்திற்கும் நாம் இடமளிக்கக் கூடாது.

புலம்பெயர் நாடுகளிலுள்ள புலிப் பினாமிகள் சிலர் முகமூடி தரித்து நாடுகடந்த தமிழீழம் என்ற ஏமாற்று நாடகத்துடன் உங்களை மீண்டும் ஏமாற்ற தயாராகி விட்டார்கள். தாயக மக்களை மென்மேலும் அவலத்திற்குள்ளாக்கி அந்த அவலத்தை காட்டி மீண்டும் உங்களிடம் காசு, பணம் சேர்த்து தாங்கள் சொத்து சுகம் அனுபவிக்க புது வடிவம் எடுத்துள்ளார்கள்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், தாயகத்தில் முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருக்கும் எமது உறவுகளின் விடுதலை, நல்வாழ்வு மற்றும் அவர்களுக்கான ஆறுதல்பற்றி கூட சிந்திக்காமல் மீண்டும் வட்டுக்கோட்டை தீர்மானத்தை தூசுதட்டி புதிய வடிவம் என ப+ச்சுற்றி நாடுகடந்த தமிழீழம் அமைக்கப் போகிறார்களாம். நீங்கள் கஸ்டப்பட்டு, வேர்வைசிந்தி, பல பிரச்சனைகளுடன் சம்பாதிக்கும் உங்களின் பணத்தை பிடுங்கவும் அதில் தாங்கள் சுகபோகங்களை அனுபவிக்கவும் மட்டுமே இந்த சுத்துமாத்துக்கள் என்பதை நீங்கள் உணராதவரை தாயக தமிழரின் இறந்த உடல்களை விற்று பிழைப்பு நடாத்தும் இவ்வாறான அயோக்கியர்கள் முளைத்துக்கொண்டே இருப்பார்கள்.

ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிவடைந்தள்ள நிலையில் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டமானது எமது மக்களின் விடுதலையைப் பெற்றுத் தரும் என்பதை மக்கள் நம்பத் தயாரில்லை. அவ்வாறாக முன்னெடுக்கப்படுகின்ற ஆயுதப் போராட்டங்களானது மென்மேலும் எமது இனத்தை அழிவுக்கே இட்டுச் செல்லும். வெறும் தமிழீழம் என்ற கோசத்தினால் எமது மக்களின் அவலநிலை இனிமேலும் தொடரக் கூடாது. இந்நிலையைத் தொடரவிடாது தடுக்க வேண்டிய தேவை எம்மனைவருக்கும் இருக்கின்றது.

எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஜனநாயக வழிமுறைகளில் போராட வேண்டிய அவசியமும் எமக்குள்ளது. எமது உரிமைகளுக்கான ஒரு ஆரம்பப் படியாக 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் நாம் கூடுதல் கவனம் செலுத்தலாம். இது பற்றிய ஆராயலாம். இதன் ஊடாக 13வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை எவ்வாறு மேம்படுத்தலாம், இன்னும் தேவையான அதிகாரங்கள் என்னென்ன என்பது பற்றி ஆராய்ந்து அவற்றை உள்வாங்கச் செய்து நடைமுறைப்படுத்த அரசின் மீது அழுத்தங்களை பல்வேறு மட்டக்களிலிருந்தும் தரப்புகளிலிருந்தும் பிரயோகிக்கலாம். தமிழீழம்இ நாடுகடந்த தமிழீழம் என்ற கனவுலகில் சஞ்சரிக்காமல் தாயகத்து தமிழ் மக்களின் வாழ்வை மேம்படுத்த வழிசெய்ய வேண்டும்.

இதுவரை காலம் நாங்கள் ஒவ்வொருவரும் போராட்டத்திற்காக புலிகளிடம் கொடுத்த பணம் அந்த மக்களின் அழிவிற்கே வழிவகுத்தது என்பதை இப்போதாவது சிந்தித்து புரிந்துகொள்வோம். புலிகளின் இந்த திடீர் அழிவுடன் புலம்பெயர் நாடுகளிலுள்ள புலிகளின் பல பில்லியன் பெறுமதியான முதலீடுகளும் ஒருசில நபர்களின் கைகளில் அகப்பட்டுவிட்டுள்ளது. போராட்டத்திற்காக என சேர்த்த இந்தப் பணம் போராட்டத்தால் அழிவுகளைச் சந்தித்த அந்த மக்களின் துயரினை ஓரளவிற்காவது போக்ககூடிய வகையில் பயன்படுத்தப்படல் வேண்டும்.

புலம்பெயர் நாடுகளில் மக்களிடம் சேர்க்கப்பட்ட பணத்தினையும், சொத்துக்களையும் புலிகளின் புலம்பெயர் பொறுப்பாளர்களும், பினாமிகளும் தாம் பதுக்கிக் கொள்ளாமல் அவற்றை வெளிக்கொணர்ந்து தாயகத்தில் அவயங்களை இழந்து, வீடுவாசல்களை இழந்து நிர்க்கதியாக நிற்கும் மக்களின் நல்வாழ்வுக்கு செலவிடல் வேண்டம். ஆயுதப் போராட்டம் என்ற பெயரில் சேர்க்கப்பட்டிருக்கும் சொத்துக்கள் யாவும் ஒண்று திரட்டப்பட்டு அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் புனர்வாழ்வுக்கும், பாதிக்கப்பட்ட உயிரிழந்த போராளிகளின் குடும்பத்திற்கும், அங்கவீனமாக்கப்பட்ட போராளிகள் மற்றும் மக்களின் மறுவாழ்வுக்கும் பயன்படுத்த வேண்டுமென ஒவ்வோர் புலம்பெயர் தமிழரும் புலம்பெயர் புலிகளிடம் வலியுறுத்த வேண்டும்.

மீண்டும் மீண்டும் தமிழீழம் என்றும் போராட்டம் என்ற மாயைக்குள் மக்களைத் தள்ளாமல் அல்லல்படும் மக்களின் மறுவாழ்வினை ஏற்படுத்தி முட்கம்பி வேலிகளுக்குள்ளும், வைத்தியசாலைகளிலும் அல்லும்பகலும் அவதியுறும் மக்களின் அவலத்தை நீக்கிஇ அவர்களுக்கு ஒர் சுயகௌரவத்துடன் கூடிய சுதந்திரமான வாழ்வை ஏற்படுத்தி கொடுத்து அவர்களது இயல்பு வாழ்வினை மேம்படுத்தவும் முன்நின்று செயற்படுவோம்.

“அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்”

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF) -நோர்வே
Democratic Peoples Liberation Front(DPLF)-Norway

தமிழர்களை அவமரியாதையாக பேசவில்லை - இலங்கை துணைத் தூதர்
-


"இடம்பெயர்ந்தோர் முகாம்கள் விலங்கியல் பூங்கா என்று நான் கூறவில்லை. இந்திய எம்.பிக்கள் குழுவின் வருகையை இலங்கை அரசு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது" என்று இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி.

பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், "ஆளாளுக்கு வந்து பார்த்துப் போக இடம் பெயர்ந்தோர் முகாம்கள் என்ன விலங்கியல் பூங்காவா?" என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ. நெடுமாறன், டாக்டர் ராமதாஸ், தா.பாண்டியன், திருமாவளவன் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கிருஷ்ணமூர்த்தியின் பேச்சைக் கடுமையாக கண்டித்துள்ளனர். இந்தியாவை விட்டு அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

இந்த நிலையில் நான் அப்படிப் பேசவில்லை என்று இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் உண்மையில் என்ன சொன்னேன் என்றால், முகாம்களில் வசிக்கும் மக்கள் மரியாதைக்குரியவர்கள். அவர்களை அடிக்கடி சென்று சந்திப்பது, அதுவும் சர்ச்சைகள் நிலவி வரும் நேரத்தில் போய்ச் சந்திப்பது என்பது பொருத்தமானதாக இருக்காது என்றுதான் கூறினேன்.

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதுதான் எனது முதல் பணி, முக்கியப் பணி.ஏற்கனவே இலங்கைக்கு தூதுக் குழுவை அனுப்புமாறு முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அந்தக் குழுவின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்" என அவர் தெரிவித்துள்ளதாக இந்தியச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன
வெள்ளவத்தை வீட்டிலிருந்து கைது செய்யப்பட்ட வங்கி அதிகாரி ஒருவர் விடுதலை அவரது மனைவி தொடர்ந்து தடுத்து வைப்பு
கொழும்பு வெள்ளவத்தையில் சில தினங்களுக்கு முன்னர், மனவையுடன் கைது செய்யப்பட்ட அரச வங்கி அதிகாரி பொலிசாரினால் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வி.ஞானோதரன் என்ற அந்த வங்கி அதிகாரியின் மனைவி தொடர்ந்தும் பொலிசாரினால் விசாரணை செய்யப்பட்டு வருவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பொது மருத்துவமனையில் பணியாற்றிய வைத்திய நிபுணர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே இந்த கைது நடவடிக்கையும் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில் வவுனியா இறம்பைககுளத்தில் அவரது வீட்டிலிருந்தவேளை, கைது செய்யப்பட்ட வவுனியா பொது மருத்துவனையின் பதில் வைத்திய நிபுணராகிய மகேஸ்வரன் உமாகாந்த் தொடர்ந்தும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரை அவரது குடும்ப உறவினர்கள் சென்று பார்வையிடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாளம்பைக் குளத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் குறித்து ஆராய்வு


பகுதியில் வசித்து வரும் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் குறித்து ஆராயும் வகையில் வவுனியா சாளம்பைக் குளத்தில் விசேட கூட்டமொன்று நேற்று மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றது.

வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்ருமான றிசாத் பதியுதீன் தலைமையில் இக் கூட்டம் இடம்பெற்றது.

1990 ஆம் ஆண்டு வவுனியா மாவட்டத்தில் சாளம்பை கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தற்போது அநுராதபுரம் மாவட்டத்தில் இக்கிரிகொல்லாவ சாளம்பைபுரம் பகுதியில் வசித்து வருகின்றனர். வடக்கில் எற்பட்டுள்ள சூழலையடுத்து இம்மக்கள் மீண்டும்; தமது சொந்த கிராமமான சாளம்பைகுளத்துக்கு செல்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இக்கிராமத்தக்கான குடிநீர்,மின்சார விநியோகம்,உட்கட்டமைப்பு வசதிகளுடன்,தூர்ந்து போயுள்ள கிணறுகளை புனரமைப்பு செய்தல் என்பன குறித்தும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கவனம் செலுத்தினார்.

தற்போது இந்த கிராமத்;தில் 21 குடும்பங்கள் மீளக்குடியமர்ந்துள்ள நிலையல் எஞ்சியுள்ள 379 குடும்பங்களை மீளக்குடியமர்த்த திட்டங்கள் வகுக்கப்பட்டுவருகின்றன.

வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திருஞானசம்பந்தர்,அமைச்சின் உதவிச் செயலாளர் முத்து முஹம்மத்,திட்ட பணிப்பாளர்,பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட அதிகாரிகள்,மீளக்குடியமரவுள்ள மக்களும் இதில் கலந்துகொண்டனர்
இடைத்தங்கல் முகாமில் விடுவிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் செல்ல வழியின்றி அல்லல்



வடக்கே வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் தொகுதியில் இருந்து கர்ப்பிணி தாய்மார்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படும் ஒரு தொகுதியினர் சனிக்கிழமை மாலை வவுனியா பேரூந்து நிலையத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

இவர்களை வவுனியா நகரசபை மண்டபத்தில் தங்க வைத்து உணவு மற்றும் அத்தியாவசிய வகதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன், நகரசபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் ஆகியோர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

சொந்த இடங்களுக்கோ அல்லது உறவினர்களின் வீடுகளுக்கோ உடனடியாகச் செல்ல முடியாதுள்ள இவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளை தாங்கள் செய்யப்போவதாக நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதனும், முகாம்களை விட்டு வந்துள்ளவர்கள் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்லும் வரையில் அவர்களை பராமரிக்கப்போவதாக நகரசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனும் தெரிவித்துள்ளதாக பிபிசி தமிழோசை தெரிவித்துள்ளது
மொனராகலையில் போதி மரம் முறிந்து விழுந்ததில் 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி


மொனராகலை ஒபேகொடவில் போதி மரம் முறிந்து விழுந்ததில் மத வழிபாட்டில் ஈடுபட்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 27 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

நேற்று பெளர்ணமி தினமாகும் இது தொடர்பான மத வழிபாடு அப் பகுதியிலுள்ள பெளத்த விகாரையொன்றல் நடை பெற்றுக் கொண்டிருந்த வேளை போதி மரம் (அரச மரம்) சீரற்ற கால நிலை காரஷமாக முறிந்து விழுந்ததாக சம்பவம் தொடர்பாகக் கூறப்படுகின்றது.
சொந்த வாழ்விடங்களில் மக்கள் குடியமர்த்தப்படும்வரை
எமது
உதவி தொடரும் ஜி ரி லிங்கநாதன் PLOT










சொந்த வாழ்விடங்களில் மக்கள் குடியமர்த்தப்படும்வரை எமது உதவி தொடரும்-ஜி.ரி.லிங்கநாதன்! வுன்னியில் இருந்து இடம்பெயர்ந்து இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள எமது மக்கள் தமது வாழ்விடங்களில் குடியமரும்வரை அவ் மக்களுக்கான எமது உதவிகள் தொடரும் என புளொட் இயக்கத்தின் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபை எதிர்கட்சி தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் (விசுபாரதி)
அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம் செட்டிகுளம் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு வவுனியா நகரில் கொண்டுவந்து நிற்கதியான நிலையில் விடப்பட்டுள்ள மக்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வன்னியில் இடம்பெற்ற மோதல்களையடுத்து அங்கிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நோக்கி வருகைதந்த எம் மக்களுக்கு உதவிய நாம் தொடர்ந்தும் அவ் மக்கள் தமது
வாழ்விடங்களில் மீள குடியேறும்வரை அவர்களுக்கு உதவிடுவோம் என்று தெரிவித்துள்ளதுடன். வவுனியா பஸ் நிலையத்தில் கைவிடப்பட்ட மக்களுக்கான உணவு மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளதுடன், வவுனியா கோயில்குளம் சிவன்கோயிலில் தங்கவைக்கப்பட்டுள்ள வயோதிபர்களது நிலமையையும், அவர்களது குறைநிறைகளையும் ஜி.ரி.லிங்கநாதன் கேட்டறிந்து கொண்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக