4 அக்டோபர், 2009


பொதுமக்களையும் புலி உறுப்பினர்களையும் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் மூவர் கைதுதிருமலையில் அமைக்கப்படும் இந்நாட்டின் மிக நீண்டபாலம் அடுத்தவாரம் திறந்து வைப்பு-
வடமாகாணத்திற்கு மின்சாரத்தைப் பெற்றுக்கொடுக்கும் பணிகள்

இடம்பெயர்ந்த நிலையில் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த பொதுமக்களையும் புலி உறுப்பினர்களையும் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பியதாகக் கூறப்பட்டு மூவர் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் புத்தளம் பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களையடுத்தே இவர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டதாகவும், தற்போது இவர்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.


வடமாகாணத்திற்கு மின்சாரத்தைப் பெற்றுக் கொடுக்கும் பணிகளை வினைத்திறன் மிக்கதாக்குவதற்கு மேலும் இரு அதிவலு மின் விநியோகத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் டபிள்யூ.டீ.ஜே. செனிவிரட்ண தெரிவித்துள்ளார். மாங்குளத்திலிருந்து கிளிநொச்சி வரையும் மற்றும் மாங்குளத்திலிருந்து முல்லைத்தீவு வரையுமான அதிவலு மின்விநியோகம் இம்மாத இறுதியில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கென 175மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது. இதேநேரம் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கு மின்சாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் துரிதமாக மேற்கொள்ளப்படுவதாக வடக்கு வசந்தம் அபிவிருத்தி செய்திட்டத்தின் மின்சார அபிவிருத்திப் பணிகளுக்கான பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

திருமலையின் மூதூருக்கும் கிண்ணியாவுக்குமிடையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் இந்நாட்டின் மிக நீண்டபாலமான வெள்ளைமணல் பாலம் அடுத்தவாரத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. 396மீற்றர் நீளமும் 7.4மீற்றர் அகலமும் கொண்ட இந்தப் பாலத்தின் இரு மருங்கிலும் 1.5மீற்றர் அகலமான நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தியமைச்சர் டீ.பி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். சவூதி அரேபியா வழங்கிய 710மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் இந்தப் பாலத்திற்கு சீன நிறுவனமொன்றும் ஒத்துழைப்பினை நல்கியுள்ளது. 15 வீதியில் நிர்மாணிக்கப்படும் இந்தப் பாலம் கிழக்குமாகாணத்தின் பொருளாதாரத்தின் மேம்பாட்டுக்கு உறுதுணையாக அமையுமென்று கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக