12 அக்டோபர், 2009

இராணுவ அதிகாரிகள், தளபதிகள் மத்தியில் பங்கேற்கும் இறுதி நிகழ்வாக இது இருக்கலாமென ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவிப்பு-
புலிகளுக்காக உளவு வேலையில் ஈடுபட்டிருந்தவர் புலனாய்வுப் பிரிவினரால் கைது-

புலிகளுக்காக உளவு வேலைகளில் ஈடுபட்டுவந்த ஒருவரை சிலாபம் பிரதேசத்தில் வைத்து விசேட புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்புத் துறைமுகத்தின்மீது தாக்குதல் நடத்துவதற்கு தேவையான உளவுத் தகவல்களை குறித்த நபர் புலிகளுக்கு வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு இந்த உளவுப் பணிகளை அவர் மேற்கொண்டதாக தெரியவருகிறது. மற்றுமொரு புலி உறுப்பினர் வழங்கிய தகவலை அடிப்படையாகக் கொண்டு குறித்த நபரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாகவும், இச்சந்தேகநபர் புலிகளுக்கு படகுகளையும் விநியோகித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.


இலங்கை இராணுவத்தின் 60வது ஆண்டு பூர்த்திக்கான நிகழ்வுகள் இன்றையதினம் கொழும்பு, இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்று உரையாற்றிய முப்படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவத் தளபதிகள், இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட இராணுவ உயர்மட்டத்தினர் மத்தியில் தாம் கலந்து கொண்டு உரையாற்றும் இறுதி நிகழ்வாக இது இருக்குமென தான் நம்புவதாகவும், தமது இராணுவ சேவையின்போது கடப்பாட்டுடன் சகல பணிகளையும் அர்ப்பணிப்புடன் நிறைவேற்றியுள்ளதாக தாம் நம்பவதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக