12 அக்டோபர், 2009

கடவுச்சீட்டுப் பெறுவதில் புதிய விதிமுறை
வவுனியா வர்த்தகர் சங்கம் சமூகச் செயற்பாடுகளில் முனைப்புடன் ஈடுபட ஏற்பாடு

வவுனியா வர்த்தகர் சங்கம் சமூகச் செயற்பாடுகளில் இனிமேல் முனைப்புடன் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக வர்த்தகர் சங்கத் தலைவர் பி.எஸ்.அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஞாயிறன்று வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தில் நடைபெற்ற வைபவத்தில் பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

வர்த்தகர் சங்க உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கல் மற்றும் வவுனியா பொது வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவில் வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதியுதவி வழங்கல்-

ஆண்டு ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவன் சச்சிதானந்தன் கெளரீசன் உட்பட மாவட்டத்தில் முதல் ஐந்து இடங்களைப் பெற்றுள்ள மாணவர்களுக்குப் பணப்பரிசு வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய வைபவத்தில் அவர் உரையாற்றினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"இப்போது நாட்டில் யுத்தமில்லை. வவுனியாவில் அமைதி நிலவுகின்றது. முன்னர் வர்த்தகர்கள் வெளியில் செல்வதற்கே அச்சமடைந்திருந்தார்கள். இதனால் வவுனியா வர்த்தகர் சங்கம் செயலற்றிருந்தது.

இப்போது நிலைமை மாறியுள்ளது. இதனையடுத்து, வர்த்தகர் சங்கம் தனது நடவடிக்கைகளைத் துடிப்போடு செய்வதற்கு முன்வந்துள்ளது. அதன் முதற்படியாகவே இந்த வைபவம் நடைபெறுகின்றது" என்றார்.

இந்த வைவத்தில் வரவேற்புரை நிகழ்த்திய வவுனியா வர்த்தகர் சங்கத்தின் உபதலைவர் ரீ.கே.இராஜலிங்கம் பேசுகையில்,

"வவுனியா வர்த்தகர் சங்கம் முதலாவது செயற்பாடாக தனது அங்கத்தினர்களுக்கு வர்த்தகர் சங்கத்தின் அடையாள அட்டையை வழங்குகின்றது. இந்த அடையாள அட்டையில் வர்த்தகர் சங்கத் தலைவரும், வவுனியா தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டரும் கையெழுத்திட்டுள்ளார்கள். இது பெறுமதியுள்ள ஓர் ஆவணமாகும்.

புனரமைக்கப்பட்டுள்ள வவுனியா வர்த்தகர் சங்கத்திற்கு வர்த்தகர்கள் தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றார்கள். அவர்களது ஒத்துழைப்புடன் மேலும் மேலும் பல சமூக காரியங்களை முன்னெடுப்பதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

வவுனியா வர்த்தகர்கள் பல்வேறு சமூக சேவைகளுக்காக மாதந்தோறும் பெருமளவு நிதியை வழங்கி வருகின்றார்கள். இந்த நிதியைக் கொண்டு வெவ்வேறு அமைப்புக்கள் நற்பெயரைத் தட்டிச் சென்றுள்ளன.

எனவே, இவ்வாறான சமூகச் செயற்பாடுகளை வர்த்தகர் சங்கமே முன்னெடுக்க வேண்டும் என்பதற்காக எமது சங்கச் செயலாளர் கே.சி்றிஸ்கந்தராஜா தெரிவித்த ஆலோசனையையடுத்து, வவுனியா மாவட்டத்தில் ஆண்டு ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தமது திறமைகளை வெளிப்படுத்தி அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுள்ள ஐந்து மாணவர்களுக்குப் பணப் பரிசுகளை வழங்கத் தீர்மானித்தோம்.

அதேவேளை, இந்த மாணவர்களுக்கு கல்வியூட்டிய பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்களைப் பாராட்டுவதற்கும் ஏற்பாடுகள் செய்தோம்.

வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். அவரையும் அந்தப் பாடசாலையையும் அதிபர், ஆசிரியர்களையும் வர்த்தகர் சங்கம் பாராட்டி மகிழ்கின்றது" என்றார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வவுனியா தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் சமன்சிகர,

"வவுனியாவில் தற்போது நள்ளிரவு 12.00 மணிவரை மக்கள் நடமாடத்தக்க வகையில் நிலைமை சீரடைந்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்புக்காக பொலிசார் இரவு முழுதும் சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். வவுனியா நகரத்தை அழகுற வைத்திருக்க வேண்டியது வர்த்தகர்களினதும், வவுனியா நகரசபைத் தலைவர், உறுப்பினர்களினதும் கடமையாகும்.

இதற்கான திட்டங்களை வகுத்து வவுனியா நகரசபை செயற்பட வேண்டும்" என்றார்.

இந்த வைபவத்தில் வவுனியா நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன் நகரசபை உறுப்பினரும், முன்னாள் நகரசபைத் தலைவருமான ஜி.ரீ.லிங்கநாதன், மற்றும் நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி, முனாவர், எஸ்.குமாரசாமி, வவுனியா தெற்கு வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.நா.மாணிக்கவாசகம், ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப் பணி்ப்பாளர் சி.கணேசபாதம், வவுனியா மகப்பேற்று நிபுணர் டாக்டர் என்.சரவணபவ, வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத் தலைவர் நா.சேனாதிராஜா ஆகியோர் உட்படப் பலரும்

தந்தை இருவரது இணக்கப்பாட்டின் பின்பே சிறுவர்களுக்குக் கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. இன்று முதல் இது அமுலில் இருக்குமெனவும் அறிவித்துள்ளது.

புது சட்ட விதிகளுக்கு அமைவாக 16 வயதுக்கு உட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் அவர்களது பெற்றோரின் இணக்கப்பாட்டுக்குப் பின்பே கடவுச்சீட்டு வழங்கப்படுமென திணைக்களத்தின் அதிகாரி ரி.பி.அபயகோன் தெரிவித்தார்.

பெற்றோர் விவாகரத்துப் பெற்றிருப்பின் அல்லது சட்ட விதிகளுக்கு அமைய பிரிந்திருப்பின் நீதிமன்ற உத்தரவு அல்லது சட்ட ஆவணங்கள் பெற்றோர் சார்பாக சமர்ப்பிக்கப்படின் கடவுச்சீட்டு வழங்கப்படும்.இப்புதிய விதிமுறை சிறுவர்கள் அவர்களது பெற்றோர்களால் கடத்தப்படுவதைக் குறைப்பதற்காகவே அமுல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக