12 அக்டோபர், 2009

அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு இந்திய அரசுக்கு கால அவகாசம் தேவை - யாழ்ப்பாணத்தில் இந்திய தூதுக்குழுவின் தலைவர் பாலு


தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு இந்திய அரசாங்கத்துக்கு கால அவகாசம் தேவை. இலங்கைப் பிரச்சினையின் சாதக பாதகங்களை ஆராய வேண்டியுள்ளது. நலன்புரி முகாம்களில் உள்ள மக்களை நேரில் பார்வையிட்டு அவர்களை மீளக்குடியேற்றுவதற்கான அழுத்தத்தை வழங்குவதற்காகவே நாம் இலங்கை வந்துள்ளோம் என்று தமிழக பாராளுமன்ற குழுவின் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். யாழ். குடாநாட்டுக்கான விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றுக்காலை ஹெலிகொப்டர் மூலம் வந்த இக்குழுவினர் யாழ். நூல்நிலையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்குபற்றினர். இங்கு கருத்துத் தெரிவித்தபோதே டி.ஆர். பாலு மேற்கண்டவாறு கூறினார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கை தமிழர்களுடனான எமது உறவு தொப்புள் கொடி உறவு என்பதை யாரும் மறுக்கமுடியாது. இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் ஒரே பார்வையில் ஒரே குடிமக்களாக வாழ வேண்டும். இதற்காக எமது அரசாங்கம் வேகமாக செயற்பட்டு வருகின்றது. இந்திய மத்திய அரசாங்கத்தின் அனுமதியுடனும் தமிழ்நாட்டின் வேண்டுகோளுக்கிணங்கவும் இலங்கை ஜனாதிபதியின் அனுசரணையுடனும் எமது விஜயம் அமைந்துள்ளது.

இலங்கைப் பிரச்சினையில் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்பவர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டியது அவசியமாகும். இதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட கடற்றொழில் சமாசத்தினால் சில கோரிக்கைகள் முனவைக்கப்பட்டன.

போர் முடிவடைந்தடையடுத்து பகுதிபகுதியாக மீன்பிடிப்பதற்கு கடற்படையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் உள்நாட்டு மீனவர்களின் படகுகள் சேதமாக்கப்பட்டு வருகின்றன. இதனால் கடற்றொழிலாளர் குடும்பங்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றன. இதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கடற்றொழில் சமாசத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்குப் பதிலளித்த டி.ஆர். பாலு, இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு மத்திய அமைச்சர் சிதம்பரம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக கடல் எல்லையில் தொழில்செய்வதற்கு பாஸ் நடைமுறை பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இங்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் சார்பில் மாணவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கøயில் ரஜீவ் காந்தி கொலையையடுத்து பெருமளவான தமிழ்மக்களது உயிர்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனைக் காரணமாக வைத்து மேலும் எத்தனை உயிர்களை பலிகொள்ளப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இறுதிக்கட்ட போராட்டத்தின்போது இந்தியாவின் தேர்தல் மாற்றத்தைக் கொண்டுவருமென நாம் நம்பியிருந்தோம். ஆனால் அவø ஒன்றும் சாத்தியப்படவில்லை. தமிழ்மக்களின் உயிர்களே பலியாகின. இனியும் எத்தனை உயிர்களை பலிகொள்ளப் போகிறீர்கள் என்றும் அந்த மாணவன் இந்திய தூதுக்குழுவினரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக