பணயக் கைதிகளை பாகிஸ்தான் படையினர் மீட்டபோது இலங்கை கிரிக்கெட் அணிமீதான தாக்குதல் சூத்திரதாரி கைது-
உரிமை கோரப்படாத இலங்கைப் படகொன்று தமிழக கடற்பரப்பில் மீட்பு-
உரிமை கோரப்படாத இலங்கைப் படகொன்று தமிழக கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இராமேஸ்வரம், மண்டபம் தென்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்களால் நிர்க்கதியான நிலையி;ல் இருந்த இந்தப்படகு மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டுள்ளது. சிங்கள மொழியிலான வாசகம் பொறிக்கப்பட்டுள்ள குறித்த படகு இலங்கைக்கு சொந்தமானதென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கரைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள இந்தப்படகு குறித்து தமிழகத்தின் சுங்கத் திணைக்களமும், கியூ பிரிவு பொலீசாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். |
பாகிஸ்தானில் இராணுவ தலைமைக் காரியாலயத்தில் பயங்கரவாதிகளால் பணயமாக வைக்கப்பட்டிருந்த குழுவினரை படையினர் விடுவித்தபோது கைதுசெய்யப்பட்ட பயங்கரவாதிகளில், இலங்கை கிரிக்கெட் அணிமீதான தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரி என்று சந்தேகிக்கப்படும் ஒருவரும் அடங்குவதாக பாகிஸ்தான் அசோசியேட்டட் பிறஸ் தெரிவித்துள்ளது. நேற்றுக்காலை இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது காயங்களுடன் கைதான பயங்கரவாதிகளுடன் கைதுசெய்யப்பட்ட பயங்கரவாத கொமாண்டோவான உஸ்மான் என்பவர் இலங்கை கிரிக்கெட் அணிமீது தாக்குல் நடத்தப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரி என நம்பப்படுவதாக பாகிஸ்தான் பொதுஜன உறவு சேவைகள் பேச்சாளர் மேஜர்ஜெனரல் அதார் அப்பாஸ் தெரிவித்துள்ளார். இத் தேடுதலின்போது கொல்லப்பட்ட நான்கு பயங்கரவாதிகளில் இருவர் தற்கொலை அங்கிகளை அணிந்திருந்ததாகவும்; அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக