20 அக்டோபர், 2009


20.10.9தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ். குடாவின் துரித அபிவிருத்தியில் 11 அமைச்சர்கள் பங்கேற்பு : அரசு ஏற்பாடு


யாழ். மாவட்ட மீள்குடியமர்வு நவம்பர் நடுப்பகுதியளவில் முடிவுறும் : அரச தரப்பு



முகாம்களில் உள்ள யாழ். மாவட்ட மக்களை மீள் குடியமர்த்தும் நடவடிக்கைகள் நவம்பர் மாத நடுப்பகுதியளவில் முற்றுப் பெற்றுவிடும் என அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்து வந்திருந்த 2 லட்சத்து 82 ஆயிரம் பேரில் இதுவரையில் 55 ஆயிரம் பேர் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இதில் 30 ஆயிரம் பேர் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனையோர் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.

முகாம்களில் உள்ள யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த எஞ்சிய மக்களை மீளக் குடியமர்த்துவதற்காக நாளாந்தம் 2 ஆயிரம் பேரை அங்கு அனுப்பி வைப்பதற்காக வடக்கின் வசந்தம் திட்டத்தின் தலைவரான பசில் ராஜபக்ஷவின் தலைமையில்,
அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள் என்றும் அரச தரப்பில்



யாழ். மாவட்டத்தைத் துரிதகெதியில் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக வடக்கின் வசந்தம் திட்டத் தலைவரான பசில் ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் 11 அமைச்சர்களை நேரடியாக அங்கு அனுப்பிப் பிரதேச செயலாளர் மட்டத்தி்ல் பணியாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலாளர்களுடனும் இந்த அமைச்சர்கள் இணைந்து பணியாற்றவுள்ளார்கள்.

இதற்கான முதலாவது, ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

மகிந்தானந்த அலுத்கமகே, துமிந்த திசாநாயக்கா, மகிந்த அமரசேகர, ரோகித அபேவர்தன, ஹுசைன் பைலா, லசந்த அழகியவர்ண, வடிவேல் சுரேஷ், பிரேம்லால் ஜயசேகர, ஜயரட்ண ஹேரத், ஜகத் புஸ்பகுமார, அர்ஜுன ரணதுங்க ஆகிய 11 அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

இவர்கள் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்து யாழ். மாவட்டத்தின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, உட்கட்டமைப்பு பணிகள் என்வற்றை அவரவருக்கென ஒதுக்கப்பட்ட பிரதேச செயலாளர் மட்டத்தில் மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களில் மகிந்தானந்த அலுத்கமகே, ஹுசைன் பைலா, வடிவேல் சுரேஷ், ஜயரட்ண ஹேரத் ஆகிய 4 அமைச்சர்களும் தலா இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குப் பொறுப்பாகவும், ஏனையோர் தலா ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்குப் பொறுப்பாகவும் இருந்து பணியாற்றுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக