20 அக்டோபர், 2009

20.10.புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு திருப்பியனுப்பும் நடவடிக்கையினை மீள்பரிசீலனை

செய்ய பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு
மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை கவனத்தில் எடுக்குமாறும், புகலிடக் கோரிக் கை நிராகரிக்கப்பட்டவர்களை இலங்கை க்கு திருப்பியனுப்பும் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யுமாறும் பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, பிரிட்டனின் கொள்கை, மறுமதிப்பீடு செய்யப்படுகிறது என்று பிரிட்டிஷ் உள்துறை அலுவலகம் நீதிமன்னத்திற்கு அறிவித்ததை அடுத்து மேல் நீதிமன்ற நீதியரசர் பெலிங் கியு??.சி இந்த அறிவித்தலை விடுத்தார்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதாக அரசாங்கம் கடந்த மே மாதம் 18ஆம் திகதி அறிவித்தது. இலங்கைத் தமிழர் ஒருவர், பிரிட்டிஷ் எல்லை பாதுகாப்பு நிறுவனத்தினால் தாம் 2006ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி தொடக்கம் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதை ஆட்சேபித்து தாக்கல் செய்த மேன்முறையீட்டின் மீது தீர்ப்பு வழங்கிய மன்செஸ்டர் மேல் நீதிமன்ற நீதியரசர் மேற்கண்ட அறிவித்தலை வெளியிட்டார். திரு. பி“ என்று மட்டும் பிரஸ்தாப இலங்கையரின் பெயர் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதியரசர் பெலிங் கூறியதாவது: முதலில், மறுபரிசீலனைக்கான ஒரு காரணம் மட்டும் போதாது, யுத்தத்தின் பின்னர் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

பிரிட்டிஷ் உள்துறை அலுவலகம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், அலுவலகம் மறுமதிப்பீடு மேற்கொண்டு வருகிறது என்றும் இது முடியும் வரை புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்பும் திட்டம் அமுல் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் எல்லை பாதுகாப்பு நிலைய அதிகாரி அன்ரூ பிலிப் சோன்டேர்ஸ் இது சம்பந்தமான அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். நடைமுறையில், சில தனிப்பட்டவர்கள் இனம்காணப்பட்ட போதிலும், கடைசியாக ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி ஒருவர் திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் தற்போது வரையும் தருப்பி அனுப்ப திட்டமிடப்படவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு.பி தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்று தீர்ப்பு வழங்கிய நீதியரசர் பெலிங் கியூ.சி கொள்கை மறு மதிப்பீடு செய்யப்பட்டு வருவதால் தற்öபோதைக்கு அவர் திருப்பி அனுப்பப்பட மாட்டார் என்றும் தெரிவித்தார்.

சட்ட விரோத குடியேற்றவாசிகளை திருப்பி அனுப்புமாறு பிரிட்டிஷ் வலதுசாரி குழுக்களிடமிருந்து ஆழுத்தங்கள் அதிகரித்து வருகின்ற போதிலும் உள்துறை அலுவலகம் எடுத்தள்ள முடிவை அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் சட்ட ஆதரவு சபை பேச்சாளர் பாரர்ட்டியுள்ளார்.

எனினும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்த முடிவை பகிரங்கப்படுத்தாதமை குறித்த தமது பெயரை வெளியிட விரம்பாத பிரஸ்தாப பேச்சாளர் கண்டனம் தெரிவித்தார். இதனைப் பகிரங்கப்படுத்தினால் இலங்கையிலிருந்து மேலும் அகதிகள் படையெடுக்கலாமென அதிகாரிகள் அஞ்சுகின்றனர் என்று இந்த பேச்சாளர் பிபிசிக்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பிரிட்டிஷ் அதிகாரிகள் இரட்டை பேச்சு பேசிவருகிறார்கள் என்று குற்றம்சாட்டிய புகலிடம் கோருவோர், அவர்கள் தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப முயலும் அதேவேளை இலங்கை அதிகாரிகள் மனித உர்மைகளை மீறுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டுவதாக தெரிவித்தனர்.

இலங்கையில் அண்மையில் முடிவடைந்த யுத்தம் காரணமாக புதிதாக வரும் குடியேற்றவாசிகளை தடுப்பதற்கு பல மேற்கு நாடுகளும் குறிப்பாக அவுஸ்திரேலியாவும் முயற்சி செய்யும் இவ்வேளையில் பிரிட்டிஷ் உள்துறை அமைச்சு இந்த அறிக்கையை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் உயர் ஸ்தானிகராலயம் கடந்த ஜுலை மாதத்தில் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் யுத்தம் முடிவடைந்த போதிலும் சுமுகநிலை திரும்பாததால் அந்நாட்டின் புகலிட கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்ப வேண்டாமென சகல அரசாங்கங்களிடமும் கேரியிருந்தது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவிற்கு வந்து கொண்டிருந்த 260 அகதிகளை கைது செய்ய உதவுமாறு கடந்த வாரம் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் இந்தோனேசிய அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டதற்கு மன்னப்புக் கோர மீண்டும் மறுத்துள்ளார்.

இதற்கிடையில், இலங்கையர்கள் என்று கூறப்படம் 76 சட்ட விரோத குடியேற்றவாசிகளுடன் சென்ற கப்பல் ஒன்று கனடாவின் பசிபிக் கரையோரத்தில் வைத்து பிடி பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக