20 அக்டோபர், 2009

20.10.09இலங்கை பற்றிய முக்கிய விசாரணை அறிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளியீடு



இலங்கை சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறியுள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக ஐரோப்பிய வட்டாரங்களை ஆதாரம் காட்டி ராய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால், ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கை ஏற்றுமதி செய்யும் பெருமளவிலான பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த 100 மில்லியன் டொலருக்கும் அதிகமான தீர்வைச் சலுகைகளை அது இழந்துவிடும் என்று ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் தெரி வித்துள்ளன. இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான 25 வருட கால யுத்தத்தின் போது, இலங்கை மனித உரிமை மீறல்களிலும் சித்திரவதைகளிலும் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் ஒரு வருடத்திற்கு முன்னர் ஆரம்பித்த விசாரணைகளின் முடிவை நேற்று வெளியிட்டுள் ளது. இலங்கை அதன் பொறுப்புக்களிலிருந்து மீறிவிட்டது என்று இந்த விசாரணை முடிவு தெரிவித்துள்ளது. எனவே, அடுத்த வருட நடுப்பகுதியில் இருந்து புதுப்பிக்கப்பட இருந்த மேலதிக தீர்வைச் சலுகைகளை ரத்துச் செய்வதற்கான சட்ட முறைமையைத் தயாரிக்கும் முயற்சியை தற்போது ஆரம்பிக்கப் போவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறைவேற்று ஆணைக்குழுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பொலிஸ் வன்செயல், சித்திரவதை, வயது குறைந்த சிறுவர்களைப் பயன்படுத்தியமை உட்பட தொழிற்சட்ட மீறல்கள் ஆகியன இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் அறிக்கையில் காட்டப்பட்டுள்ளன

. இலங்கை ஜி.எஸ்.பி. பிளஸ் தீர்வைச் சலுகையைப் பெறுவதற்கான அடிப்படை மனித உரிமை நிபந்தனைகளையேனும் நிறைவேற்றவில்லை என்று ஆதாரங்களிலிருந்து மிகத்தெளிவாகத் தெரியவந்துள்ளது என்றும் ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இலங்கை போன்ற மிக வறிய நாடுகளுக்கு இந்தத் தீர்வைச் சலுகை மூலம் சில சந்தர்ப்பங்களில் அறவே தீர்வை அறவிடப்படாததையும் இவ் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த வர்த்தகத் தீர்வைச் சலுகையைப் புதுப்பிப்பதற்கு இலங்கை, 27 சர்வதேச மனித உரிமைகள் சாசனங்களில் குறிப்பிடப்பட்டவற்றை மதித்து நடந்துகாட்ட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்குத் தொடர்ச்சியாக எச்சரிக்கை செய்து வந்துள்ளது. இந்த வர்த்தகச் சலுகை நிறுத்தப்படுவதால் இலங்கையின் புடைவைக் கைத்தொழில் கடுமையாகப் பாதிக்கப்படும். இதன் விளைவாக, பெருந்தொகையானோர் வேலையிழக்கவும் நேரிடும்.

2008ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியமே இலங்கையின் மிகப்பெரும் ஏற்றுமதிச் சந்தையாக விளங்கியது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான மொத்த ஏற்றுமதிகளில் 34 சதவீதத்தை இலங்கையே மேற்கொண்டு வந்தது. இதனையடுத்து, அமெரிக்கா 24 சதவீத ஏற்றுமதிகளை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பிவந்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான புடைவை ஏற்றுமதிகளிலிருந்து இலங்கை 3.47 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் சம்பாதித்தது வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு அதிக அளவிலான அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தந்ததும் ஆடை ஏற்றுமதியே ஆகும். இதனையடுத்து, தேயிலை ஏற்றுமதி மூலம் 3 பில்லியன் டொலர் அந்நியச் செலாவணியை இலங்கை பெற்றுக்கொண்டது.

திங்கட்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையை ஆணைக்குழு ஆராய்ந்து, இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வர்த்தகச் சலுகையை தற்காலிகமாக நிறுத்துமாறு அங்கத்துவ நாடுகளுக்கு அறிவிப்பது பற்றி நவம்பர் மாத முடிவில் தீர்மானிக்க இருக்கிறது. அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் அங்கத்துவ நாடுகள் மத்தியில் நடத்தப்படும் வாக்கெடுப்பு மூலம் ஒரு தீர்மானம் எடுக்கப்படும் என்று ஆணைக்குழு அதிகாரி ஒரு வர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக