5 அக்டோபர், 2009

அவுஸ்ரேலியாவில் இரு இலங்கையர்கள் பலவந்தாம அனுப்பி வைப்பு

முகம்களிலுள்ள புலிகளை அவுஸ்ரேலியாவிற்கு அனுப்பிய மூவர் சந்தேகத்தில் கைது




வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து பொது மக்களையும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களையும் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பியதாக சந்தேகிக்கப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரச குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலை அடுத்தே அவர்கள், வாய்க்கலிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமல் மெதிவக்க தெரிவித்துள்ளார்.

இவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார




அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்து அகதி அந்தஸத்து கோரிய இரு இலங்கையர்கள் பலவந்தமாக நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக செனட்டர் இவான்ஸ் கூறுகையில் ,"பிரதமர் ரூட்டின் அரசாங்கம் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது.எமது சர்வதேச விதிமுறைகளிற்கு அமைய அவுஸ்திரேலியாவிற்குள் வருவோரிற்கு நாம் போதுமான பாதுகாப்பை வழங்குவோம்.சட்டவிரோதமாக நுழைவோரிற்கு பாதுகாப்பு வழங்கமாட்டோம்.அவ்வாறு வருவோர் அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பியனுப்பப்படுவர்" எனத்தெரிவித்தார்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் வந்த 9 இலங்கையர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை தூதுவர் தெரிவித்திருந்தார்.

இவர்களுள் நால்வர் தமது சுயவிருப்பில் நாட்டிற்கு திரும்பிச்செல்ல விரும்பியதையடுத்து சென்றுள்ளனர்.இருவர் தாம் நாட்டிற்கு திரும்பச்சென்றால் உயிராபத்து உள்ளதாக தெரிவித்துள்ளர்,இன்னுமொருவர் நாடுசெல்ல விருப்பம் தெரிவித்ததையடுத்து பேர்த்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக