9 அக்டோபர், 2009

நாட்டைக் கட்டியெழுப்ப ரஷ்யா உதவி இலங்கை வரும் இந்திய எம்.பிக்கள் குழுவிற்கு டி.ஆர்.பாலு தலைமை
தாங்குவார்








இலங்கையில் இடம்

பெயர்ந்து முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலை முறித்து ஆராய இலங்கை வரவுள்ள் இந்திய பாராளுமன்ற உறுப்பினர் குழுவில் தி.மு.க, காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய அடங்கிய தி.மு.க கூட்டணி எம்.பிக்கள் மட்டும் இடம்பெறுகின்றனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தக் குழு இலங்கை செல்லும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் ஸ்டாலின் இக்குழுவில் இடம் பெற மாட்டார் எனத் தெரிகிறது. அவருக்குப் பதிலாக டி.ஆர்.பாலு தலைமை தாங்குவார் என்று தெரிய வருகிறது.

இக்குழுவில் திமுக சார்பில் கனிமொழி, ஏ.கே.எஸ்.விஜயன், ஹெலன் டேவிட்சன், டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இடம் பெறலாம் எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தரப்பில் ராஜ்யசபா எம்.பி. சுதர்சன நாச்சியப்பன், என்.எஸ்.வி.சித்தன், ஹாரூன் ரஷீத், எஸ்.அழகிரி ஆகியோர் இடம் பெறலாம்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவனும் இக்குழுவில் இடம் பெறவுள்ளார்.

இந்தக் குழு சில இடம் பெயர்ந்தோர் முகாம்களைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திய பின் ஒக்டோபர் 14 ஆம் திகதி இவர்கள் நாடு திரும்புவார்கள்.

இன்று இந்த எம்.பிக்கள் குழு சென்னையில் கூடி சந்தித்து ஆலோசனை நடத்திய பின்னர் நாளைய தினம் இவர்கள் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திமுக கூட்டணி கட்சி எம்.பிக்கள் குழுவின் பயணம் குறித்த முறைப்படியான தகவல் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது



யுத்தத்தின் பின்னரான இலங்கையைக் கட்டியெழுப்ப பூரண ஆதரவு வழங்கப்படும் என ரஷ்ய அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைளுக்குத் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கப்படும் என ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

யுத்த ஆரம்ப காலம் முதல் முடிவடைந்த வேளை வரை பல கட்டங்களில் ரஷ்யா உதவிகளை வழங்கியுள்ளதாக இலங்கைக்கான அந்நாட்டுத் தூதுவர் விளாடிமிர் மிக்கலோவ் தெரிவித்துள்ளார்.

640,000 பெறுமதியான நிவாரணப் பொருட்களைக் கையளிக்கும் வகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்காக இரண்டு விசேட நிபுணர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் வடபகுதியில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ரஷ்யா வழங்கி வரும் ஆதரவுகளுக்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது
வெளிநாடுகளில் செயல்படும் எல்டிடிஇ ஏஜெண்டுகளுக்கு எதிராக வேட்டை: இலங்கைத் தகவல்

கொழும்பு, அக். 8: வெளிநாடுகளில் செயல்படும் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஏஜெண்டுகளுக்கு எதிரான வேட்டையை பல்வேறு நாடுகளின் உளவு அமைப்புகள் மேற்கொண்டுள்ளன என இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடும் சண்டை நடத்தி விடுதலைப்புலிகள் அமைப்பை ஒழித்த இலங்கை, தற்போது எஞ்சியுள்ளவர்களையும் அந்த அமைப்புக்கு ஆதரவானவர்களையும் ஒழித்துக் கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் செயல்பட்டுவரும் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஏஜெண்டுகள் போதை மருந்து கடத்தல், பெண்கள் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவதாகவும் அவர்களுக்கு பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும் தனது இணையதளத்தில் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்நிய நாடுகளில் ரகசியமாக செயல்படும் இந்த ஏஜெண்டுகள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவதாகவும் அது குற்றம்சாட்டியுள்ளது. இவர்களுக்கு எதிரான வேட்டை, பல்வேறு நாடுகளில் உள்ள உளவு அமைப்புகளுடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது. இதில் அந்தந்த நாடுகளின் சட்ட அமலாக்க பிரிவுகளும் இணைந்துள்ளன என முக்கிய வட்டாரங்களை மேற்கோள் காட்டி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உளவு அமைப்புகளின் இடைவிடாத முயற்சிகள் காரணமாக அந்த ஏஜெண்டுகளுக்கு எங்குமே இடமில்லாமல் போய்விட்டது என்றும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக