போரை காரணங்காட்டி அபிவிருத்தியை நிறுத்தவில்லை : ஜனாதிபதி
யுத்த பிரதேசத்தில் கடமையாற்றிய மருத்துவர்கள் மீண்டும் அரச பணிகளில்

இலங்கையின் வடக்கே அண்மையில் மோதல் இடம்பெற்ற பகுதிகளில் கடமையாற்றி, அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட அரச மருத்துவர்கள் மூவர் மீண்டும் அரச பணிகளில் இணைக்கப்பட்டுள்ளனர்.நான்காவது மருத்துவர் மேற்படிப்பைத் தொடர சென்றுள்ளார்.
வட மாகாண மேலதிக சுகாதார சேவைகள் பணிப்பாளராக டாக்டர் சத்யமூர்த்தி பொறுப்பேற்றுள்ளார். அதேவேளை வட மாகாண திட்டமிடல் அதிகாரியாக டாக்டர் வரதராஜா பணியேற்றுள்ளதுடன் வவுனியாவில் தற்காலிகமாக இயங்கும் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார திணைக்களத்தில் டாக்டர் சண்முகராஜா பணியமர்த்தப்பட்டுள்ளார்.
டாக்டர் இளஞ்செழியன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த மருத்துவர்கள் அரசுப் பணிகளில் நியமிக்கப்பட்டிருந்தாலும் இவர்கள் மீதான சட்ட நடைமுறைகள் இன்னமும் கைவிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

"யுத்தத்தைக் காரணங்காட்டி எந்தவொரு அபிவிருத்தியையோ மக்கள் நிவாரணங்களையோ நாம் நிறுத்தவில்லை. அரச துறையிலும் ஆட்குறைப்பு செய்யவில்லை" என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சூரியவெல நகரில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
"நாடளாவிய ரீதியில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றோம். இலங்கையின் அபிவிருத்தி வரலாற்றில் சமகாலத்தில் ஐந்து துறைமுகங்கள் நிர்மாணிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும் என்பதை மக்கள் மறக்கக்கூடாது.
உலக நாடுகளுடன் எமக்கு எந்தவித கோபமும் இல்லை. அதேவேளை அழுத்தங்களுக்கு அடிபணியவோ தாய்நாட்டைக் காட்டிக் கொடுக்கவோ தயாரில்லை. தாய்நாட்டைப் பாதுகாப்பது எமது பிரதான பொறுப்பாகும்.
பயங்கரவாதம் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது. பயங்கரவாதம், பாதாள உலக அச்சுறுத்தல் மற்றும் எந்தவொரு அழுத்தமும் இல்லாத கௌரவம் மிக்க நாட்டில் சகல மக்களும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே எமது நோக்கம். அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.
எமக்கெதிராக, எமது படை வீரர்களுக்கெதிராக சர்வதேசம் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும்போது எமது எதிர்க்கட்சியினர் அதற்குத் தூபமிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்குச் சாட்சியமாகத் தகவல் சேகரிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜீ.எஸ்.பீ. சலுகையை வழங்கவேண்டாமென்று கூறுகின்றனர். அதனை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது எமக்குத் தெரியும்.
வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்த யுகத்துக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். விவசாயம், கிராம அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம் என சகலதுறைகளிலும் தற்போது நாடு முன்னேற்றமடைந்து வருகிறது.
கல்வியறிவில் நமது நாடு 90 வீத வளர்ச்சியை அடைந்துள்ளமை எமக்குப் பெருமையளிக்கிறது. இம்முறை ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அம்பாந்தோட்டையிலிருந்து முதல்தர சித்தி மாணவனும் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்மொழி மூல முதல்தர மாணவனும் தெரிவாகியிருப்பது நாம் கல்வித் துறையில் மேற்கொள்ளும் சிறந்த நடவடிக்கைகளுக்கு முன்னுதாரணமாகவுள்ளது.
நாட்டைப் பயங்கரவாதத்திடமிருந்து பாதுகாத்து, ஐக்கியத்திலும் அபிவிருத்தியிலும் கட்டியெழுப்ப நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அதற்கு சகல மக்களினதும் பூரண ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம்."
இவ்வாறு ஜனாதிபதி கூறினார்.
அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, சமல் ராஜபக்ஷ, அநுர பிரியதர்ஷன யாப்பா, அதாவுட செனவிரத்ன, ஜீ.எல். பீரிஸ், சம்பிக்க ரணவக்க ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்

நாட்டைக் கட்டியெழுப்ப ரஷ்யா உதவி
இலங்கை வரும் இந்திய எம்.பிக்கள் குழுவிற்கு டி.ஆர்.பாலு தலைமைதாங்குவார்
இலங்கையில் இடம்
பெயர்ந்து முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலை முறித்து ஆராய இலங்கை வரவுள்ள் இந்திய பாராளுமன்ற உறுப்பினர் குழுவில் தி.மு.க, காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய அடங்கிய தி.மு.க கூட்டணி எம்.பிக்கள் மட்டும் இடம்பெறுகின்றனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தக் குழு இலங்கை செல்லும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் ஸ்டாலின் இக்குழுவில் இடம் பெற மாட்டார் எனத் தெரிகிறது. அவருக்குப் பதிலாக டி.ஆர்.பாலு தலைமை தாங்குவார் என்று தெரிய வருகிறது.
இக்குழுவில் திமுக சார்பில் கனிமொழி, ஏ.கே.எஸ்.விஜயன், ஹெலன் டேவிட்சன், டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இடம் பெறலாம் எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தரப்பில் ராஜ்யசபா எம்.பி. சுதர்சன நாச்சியப்பன், என்.எஸ்.வி.சித்தன், ஹாரூன் ரஷீத், எஸ்.அழகிரி ஆகியோர் இடம் பெறலாம்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவனும் இக்குழுவில் இடம் பெறவுள்ளார்.
இந்தக் குழு சில இடம் பெயர்ந்தோர் முகாம்களைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திய பின் ஒக்டோபர் 14 ஆம் திகதி இவர்கள் நாடு திரும்புவார்கள்.
இன்று இந்த எம்.பிக்கள் குழு சென்னையில் கூடி சந்தித்து ஆலோசனை நடத்திய பின்னர் நாளைய தினம் இவர்கள் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திமுக கூட்டணி கட்சி எம்.பிக்கள் குழுவின் பயணம் குறித்த முறைப்படியான தகவல் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
யுத்தத்தின் பின்னரான இலங்கையைக் கட்டியெழுப்ப பூரண ஆதரவு வழங்கப்படும் என ரஷ்ய அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைளுக்குத் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கப்படும் என ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
யுத்த ஆரம்ப காலம் முதல் முடிவடைந்த வேளை வரை பல கட்டங்களில் ரஷ்யா உதவிகளை வழங்கியுள்ளதாக இலங்கைக்கான அந்நாட்டுத் தூதுவர் விளாடிமிர் மிக்கலோவ் தெரிவித்துள்ளார்.
640,000 பெறுமதியான நிவாரணப் பொருட்களைக் கையளிக்கும் வகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்காக இரண்டு விசேட நிபுணர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் வடபகுதியில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ரஷ்யா வழங்கி வரும் ஆதரவுகளுக்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக