9 அக்டோபர், 2009

புத்தளத்தில் சர்வதேச சமாதான தினக் கொண்டாட்டம்

பாதுகாப்பு படையினருக்கு மேலும் 34 பில்லியன் ரூபா தேவை:அரசாங்கம்

பாதுகாப்பு தொடர்பான பல்வேறு செலவினங்களுக்காக 34 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.

இராணுவம், கடற்படை, வான்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படை ஆகியவற்றுக்காக இந்த செலவினங்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தமது உத்தேச கணக்கு திட்டத்தில், உயிரிழந்த மற்றும் காணாமல் போன இராணுவத்தினருக்கான வேதனங்கள், படைத்தரப்பை வலுப்படுத்தல் மற்றும் படைத்தரப்புக்கான தனிப்பட்ட செலவினங்கள் என்பவற்றுக்காக இந்த தொகையை கோரியுள்ளார்.

அதன் படி, 19.6 பில்லியன் ரூபா இராணுவத்தினரின் கட்டமைப்பு பராமரிப்புக்கு தேவைப்படுகிறது. அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த படைவீரர்களுக்கான செலவினங்களாக 570 மில்லியன் ரூபா பற்றாக்குறை நிலவுகிறது.

அத்துடன் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக 7 பில்லியன் ரூபா பற்றாக்குறையாக காணப்படுகிறது.அதேவேளை வான்படை செலவினங்களுக்காக 1.6 பில்லியன் ரூபாவும், 2.9 பில்லியன் ரூபா கடற்படை செலவினங்களும் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சிவில் பாதுகாப்பு குழுவுக்கும் 1.6 பில்லியன் ரூபா செலவின பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், இவை அனைத்தும் கருத்தில் கொள்ளப்பட்டு அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஆண்டை விட 34 பில்லியன் ரூபா அதிகமாக பாதுகாப்பு செலவின ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கிடையில் ஒப்பீட்டு ரீதியில்,2007 ஆம் ஆண்டு பாதுகாப்பு செலவீனங்களுகாக 108.67 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2008 ஆம் ஆண்டு 139.4 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டன. 2009 ஆம் ஆண்டு 166.44 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டன.


சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு புத்தள மாவட்டத்தில் 5 பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிங்களம், தமிழ் மொழிப் பாடசாலை மாணவர்களுக்கிடையில் பல மட்டத்திலான போட்டி நிகழ்ச்சிகள் நாளை 10ஆம், நாளைஅ மறு தினம் 11ஆம் திகதிகளில் நடைபெற உள்ளன.

இந்நிகழ்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கான பரிசளிப்பு வழங்கும் விழா எதிர்வரும் 22 ஆம் திகதி புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு மாவட்ட கல்வித் திணைக்களத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இக்கொண்டாட்டத்திற்கு சமூக நம்பிக்கை நிதியம் முழு அனுசரணையும் வழங்குகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக