11 அக்டோபர், 2009

ஆசிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைத்துவம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு-
வீரச்சோலையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் பற்றி தகவல் இல்லையென உறவினர்கள் தெரிவிப்பு-

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள வீரச்சோலையில் சிவில் மற்றும் சீருடையில் வந்தவர்களினால் விசாரணைக்கு என அழைத்துச் செல்லபபட்டதாகக் கூறப்படும் குடும்பஸ்தரொருவர் பற்றி தகவல்கள் இல்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 45வயதான சிந்தாத்துரை இராசையா என்ற குறித்த குடும்பஸ்தர் தொடர்பாக பொலிசில் உறவினர்கள் முறைப்பாடும் செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு பொலிஸ் சீருடையிலும், சிவில் உடையிலும் வந்தவர்களினால் இவர் வாகனமொன்றில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், மறுநாளான நேற்று சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திலும், வீரச்சோலை பொலிஸ் காவல் நிலையத்திலும் சென்று விசாரித்தபோது அப்படி யாரையும் அழைத்துவரவில்லை என அங்கு பதிலளிக்கப்பட்டதாகவும் உறவினர்;கள் தெரிவித்துள்ளனர்

ஆசிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைத்துவம் இம்முறை இலங்கைக்கு கிடைக்கவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். நேற்றையதினம் அவிசாவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். ஆசிய ஒத்துழைப்பு அமைப்பில் 30 நாடுகள் அங்கம் வகிக்கின்றன என்றும், எதிர்வரும் 14ம் திகதி நடபெறவுள்ள வருடாந்த மாநாட்டின்போது இந்த தலைமைத்துவம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர், ரோகித்த போகொல்லாகம நாடு பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்டு அபிவிருத்தி கண்டுவரும் நிலையில் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதென்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக