மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினி மருத்துவர்களின் அனுமதியோடு இன்று காளிகாம்பாள் கோவிலுக்குச் சென்று வழிபட்டு மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
கடந்த மாதம் 29ந் தேதி மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் ரஜனி அனுமதிக்கப்பட்டார். இதன்போது வைத்தியர்கள் ரஜினிக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
சிகிச்சைக்குப் பின் குணமடைந்து அன்று மாலையே வீடு திரும்பினார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்.
இதற்கிடையில் கடந்த 4ஆம் திகதி மீண்டும் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசரப் பிரிவில் வைத்து ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இன்று 7ஆவது நாளாக ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மகள் ஐஸ்வர்யா தெரிவித்தார். தினமும் அதிகாலையில் எழுந்து மருத்துவமனைக்குள்ளேயே ரஜினி நடைப் பயிற்சி மேற்கொண்டார்.
இந்நிலையில் செவ்வாய்க் கிழமை மருத்துவர்களின் அனுமதியோடு பாம்பன் சுவாமி கோயிலுக்குச் சென்று தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் காளிகாம்பாள் கோயிலில் அவர் வழிபட்டு விட்டு மீண்டும் மருத்துவமனை திரும்பினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக